ETV Bharat / state

அமைச்சர் கே.என் நேரு மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – முத்துக்குமரன்! - Minister KN Nehru - MINISTER KN NEHRU

Minister KN Nehru fake news: அமைச்சர் கே.என்.நேரு பற்றி அவதூறு பரப்பினால், முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் மீது திமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று திருச்சி பனையபுரம் திமுக ஊராட்சி தலைவர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

பனையபுரம் திமுக ஊராட்சி தலைவர்
முத்துக்குமரன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 1:38 PM IST

அமைச்சர் கே.என் நேரு மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – முத்துக்குமரன்!

திருச்சி: கடந்த சில நாட்களுக்கு முன் அமமுக வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொட்டியம் ராஜசேகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொழுது அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ரெட்டியார் இனத்தவர்களுக்கு மட்டும் பதவிகளை வழங்கி வருகிறார். மற்ற சமூகத்தினருக்குத் துரோகம் செய்து வருகிறார் என்று செய்தியாளரிடம் தெரிவித்தார். இதற்கு, திருச்சி பனையபுரம் ஊராட்சி தலைவர் முத்துக்குமரன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “திமுக ஊராட்சி செயலாளராகவும் ஊராட்சி மன்ற தலைவராகவும் 15 வருடங்களுக்கு மேலாக அமைச்சருடன் பயணித்துள்ளேன். சமீபகாலமாக அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்ட இனத்துக்குத் துரோகம் செய்தது போன்று சிலர் அவர் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், குறிப்பிட்ட சமுதாய இனத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து இனத்தவருக்கும், இந்து முஸ்லிம், கிறிஸ்துவ அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் அமைச்சர். அவர் குறிப்பிட்ட சமுதாய இனத்துக்குத் துரோகம் செய்துள்ளார் என்று கூறுவது முற்றிலும் பொய்யான செய்தி. அவருடைய சமூகததைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் பதவி வழங்கியுள்ளார்.

குறிப்பாக, ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் உள்ளிட்டோர் முத்தரையினத்தை சேர்ந்தவர்கள்.முசிறி திமுக நகரச் செயலாளர் சிவக்குமார் வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்தவர், திருச்சி மாநகர மேயர் அன்பழகன் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்தவர்,குல வேளாளர் இனத்தைச் சேர்ந்த அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.

அமைச்சர் கே.என்.நேரு பெயரைக் கெடுப்பதற்காக, சிலர் முத்தரையர் இனத்திற்கும், மற்ற சாதியினருக்கும் துரோகம் செய்வது போல அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கின்றனர். அமைச்சரைக் குறை கூறிய முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் போன்று பல கட்சிகளுக்குத் தாவித்தாவிச் சென்றவர் எங்கள் அமைச்சர் இல்லை. தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு பற்றி அவதூறு பரப்பினால் திமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'கச்சத்தீவோடு தாரை வார்க்கப்பட்ட பாரம்பரிய மீன் பிடி உரிமை' - திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன் - Lok Sabah Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.