ETV Bharat / state

சேலத்தில் பெண் கொலை.. ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை! - woman murder in salem - WOMAN MURDER IN SALEM

Woman murder in Salem: சேலத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை
சேலத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 3:25 PM IST

சேலம்: பட்டப்பகலில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய வீசாரணையில், “கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சுகுணவள்ளி. திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக, சேலம் நான்கு ரோடு பெரமனூர் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். முருகேசனுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்த நாள் என்பதால், மனைவியிடம் வாழ்த்துக்களைப் பெற்று வழக்கம் போல் துணிக்கடைக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர், சுகுணவவள்ளியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சுகுணவள்ளி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது கணவர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஓடிவந்து முருகேசன் பார்த்த பொழுது, அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுகுணவள்ளியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு, அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதனைத் தொடர்ந்து, கொலை தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களைச் சேகரித்தனர். மேலும், கணவர் - மனைவி இடையே ஏற்படும் தகராறால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

தொடர்ந்து, இறந்த சுகுணவள்ளி பயன்படுத்திய செல்போனை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவர் ஒருவர் அடிக்கடி சுகுணவள்ளியிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக செல்போன் எண் கொண்டு சுகுனவள்ளியிடம் பேசிய ஆட்டோ டிரைவரை போலீசார் பிடித்துள்ளனர். இதனையடுத்து, சுகுணவள்ளியின் கணவர் மற்றும் ஆட்டோ டிரைவர் இருவடரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான சரியான காரணம் தெரியாததால் தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி மார்க்கெட்டில் கண்ணீருடன் வந்த மூதாட்டிக்கு ரூ.15,000 கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. நடந்தது என்ன? - MK Stalin

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.