ETV Bharat / state

''கண்ணகி நீதிகேட்ட மதுரை மண்ணிலே வணிகர்களுக்காக நீதி கேட்க உள்ளோம்'' - விக்கிரமராஜா பேச்சு! - Vikramaraja - VIKRAMARAJA

Merchants Association: கார்ப்பரேட் கம்பெனியின் கடுமையான நெருக்கடியை எங்களது வணிகர்கள் தாக்குப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசியுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் பேச்சு
கண்ணகி நீதிகேட்ட மதுரை மண்ணிலே வணிகர்களுக்காக நாங்கள் நீதி கேட்க உள்ளோம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 9:20 PM IST

கண்ணகி நீதிகேட்ட மதுரை மண்ணிலே வணிகர்களுக்காக நாங்கள் நீதி கேட்க உள்ளோம்

திருப்பத்தூர்: 41வது வணிகர் சங்க மாநாடு வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என இன்று (ஏப்.28) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

ஆம்பூர் அடுத்த மாராப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மண்டலத் தலைவர் கிருஷ்ணனின் நினைவேந்தல் மற்றும் திருவுருவப் படத்திறப்பு விழா இன்று (ஏப்.28) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று, கிருஷ்ணனின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விக்கிரமராஜா, “வருகின்ற தமிழ்நாடு வணிகர் சங்க 41வது மாநில மாநாடு விடுதலை முழக்க மாநாடாக மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடாக நடைபெறும்.

இந்த மாநாடு வணிகர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளை, அத்துமீறல்களை ஒழித்துக்கட்டக்கூடிய மாநாடாக, விடுதலை முழக்கம் என்பது வணிகர்களுக்கு ஏற்பட்ட வரிப்பிரச்னைகள், அடிமைப் பிரச்னைகள், ரவுடிகளால் தொல்லை, அதிகாரிகளால் தொல்லை, இதிலிருந்து விடுவித்து வணிகர்கள் சுதந்திரமாக வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் விடுதலை முழக்க மாநாடு என்பதை வைத்து இருக்கிறோம்.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் பல லட்சம் வணிகர்களை ஒன்றுதிரட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்குப் பிறகு வணிகர்களுக்கு ஓர் திருப்புமுனை ஏற்படும். கண்ணகி நீதி கேட்ட மண் மதுரை மண், அந்த மண்ணிலே நாங்களும் வணிகர்களுக்காக நீதி கேட்கிறோம். 41வது வணிகர் சங்க மாநாடு வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும், தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தினோம். அதனைத் தொடர்ந்து, அழுத்தம் தரப்பட்டு வணிகர்களுடைய பணத்தை பறிக்கக் கூடாது என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். அதிலிருந்து வணிகர்கள் ஓரளவிற்கு மீண்டு கொண்டு இருக்கிறார்கள்.

அதே போன்று, ஜீன் 4 வரை சட்டம் நிலுவையில் இருந்தாலும், தளர்வுகள் செய்ய வேண்டும் என்ற பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளை தந்திருக்கிறார்கள். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் டெல்லியில் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து முறையிட்டு, பல்வேறு தீர்வுகளை காணக்கூடியச் சூழலை அரசிடத்திலும் காண இருக்கிறோம்.

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்கொள்ள வர்த்தகர்கள் தயாராக இருக்கிறார்கள். அதே போன்று, கார்ப்பரேட் கம்பெனியின் கடுமையான நெருக்கடியை எங்களது வணிகர்கள் தாக்குப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சங்கிலித் தொடர் விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே தான், 41வது மாநில மாநாட்டில் மாநில அரசு, மத்திய அரசு சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு பிரகடனங்களை, சிறப்புச் சட்டமாக ஏற்ற வேண்டும் என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "விவசாயிகளே இயற்கையைக் காக்கும் மருத்துவர்கள்" - மிளகு சாகுபடி கருத்தரங்கில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு! - Minister Meyyanathan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.