தூத்துக்குடி: திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தூத்துக்குடி வருகை தந்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பேசி வருகின்றனர்.
இது முற்றிலும் தவறானது. அவர் ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாகக் கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும். அவர் அனைத்து மதத்தினருக்கும், சாதியினருக்குமான தலைவராக இருந்தார். அவரைப் பற்றி இவ்வாறு கூறுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஒருவேளை இந்துத்துவா தலைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ என சந்தேகம் உள்ளது. ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெற்றிக்காக காத்திருக்கிறோம். அவர் மாபெரும் வெற்றியைப் பெறுவார் என நம்புகிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு இடத்திலும் வெற்றி பெறப் போவதில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பேருந்து பயணம், மாணவர்களுக்கான திட்டங்கள் போன்றவைகளை பாராட்டுவதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு என்பது முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
மின்சாரம் துண்டிப்பு இல்லாமல் இருப்பது உங்கள் கடமை, மின்சாரம் துண்டிப்பு இல்லாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடநாடு கொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டிலும் கைது செய்யப்படவில்லை.
கோடநாடு கொலை வழக்கு மூன்றரை ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே சென்று விட்டது. ஆனால், ஒருவரைக் கூட கைது செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது 4,500 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று கொண்டிருக்கிறது. அவர் திமுகவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சவுக்கு சங்கர் போல் சில ஆட்கள் பேசுவது முற்றிலும் தவறு, மிகவும் மோசமானதும் கூட. காலையில் விழித்தது முதல் எடப்பாடி பிரதமராக வேண்டும் என துதி பாடிக் கொண்டிருந்தார் சவுக்கு சங்கர். மேலும், சவுக்கு சங்கரை என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் பேட்டி எடுத்தவரை விட்டுவிட வேண்டும்.
குட்கா, கஞ்சா பற்றி எடப்பாடி பழனிசாமி கேட்கக் கூடாது, ஏனென்றால் அதை துவக்கி வைத்தவரே அவர் தான். கேட்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் தான் அதைப் பற்றி கேட்க வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அன்போடு அழைக்கிறேன்.
ஆனால், ரஜினி போல் இல்லாமல் நல்ல நோக்கத்தோடு வரவேண்டும் என்ற அவர், பிரதமர் தமிழகம் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றார். நாளையும் வருகிறார் அவர் வந்து சென்ற பின்பு தேர்தல் முடிவுக்கு பின்பு ஏதாவது நல்ல முடிவு தெரிய வரும்” என்றார்.
இதையும் படிங்க: "PhD படிக்க முதுகலை படிப்பு தேவையில்லை" - ரூ.4 கோடி ஸ்காலர்ஷிப்புடன் அமெரிக்கா செல்லும் தமிழக மாணவி நித்யஸ்ரீ!