ETV Bharat / state

கோடை விடுமுறை எதிரொலி; சீசனை அனுபவிக்க உதகையில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்! - kodai season in Ooty

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 11:21 AM IST

Summer season in Ooty: மலைகளின் அரசியான உதகையில் கோடை சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்துச் சுற்றுலாத் தலங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

ooty-tourist-spots-are-thronged-with-tourists-following-the-onset-of-summer-season
கோடை விடுமுறை எதிரொலி; சீசனை அனுபவிக்க உதகையில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!
தொடர் விடுமுறை எதிரொலி; கோடை சீசனை அனுபவிக்க உதகையில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!

நீலகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்கத் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதே போல் இந்தாண்டின் கோடை சீசன் தற்போது துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, உதகைக்குச் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

தற்போது தொடர் விடுமுறை காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை சீசனுக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதேபோன்று பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மலர் தொட்டியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்ச் செடிகளில் துலீப் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.

இதையும் படிங்க: கண்கலங்க வைக்கும் தருணம்.. நடுரோட்டில் உயிரிழந்து கிடந்த குட்டி யானைக் கண்ட தாய் யானையின் பாசப் போராட்டம்! - DEATH OF BABY ELEPHANT

இம்மலர்கள் அருகே நின்று சுற்றுலாப் பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர். இந்த கோடை சீசனுக்கு சுற்றுலாப் பயணிகள் வசதிக்கேற்ப நடைபாதை, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் ஓய்வு நாற்காலிகள் புதுப்பொலிவு படுத்தப்பட்டு பூங்கா சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் இப்பூங்காவிற்கு வர வாய்ப்புள்ளதாகத் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமவெளிப் பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் அதிலிருந்து தப்பிக்கும் விதமாகவும் குளுகுளு கால நிலையில் சுற்றுலாத் தலங்களைக் காண உதகைக்குச் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வரத் தொடங்கி உள்ளதால் மலைகளின் அரசியான ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது.

இதையும் படிங்க: வறண்ட சுருளி அருவி.. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்! - Suruli Waterfall At Theni

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.