நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே உள்ள நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் மழை கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் கனமழை முதல் அதி கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது.
இதன் காரணமாக இன்று உதகை - குன்னூர் இடையேயான ரயில் பாதையின் மீது பல இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்ததால் ரயில் பாதை சேதமடைந்து உள்ளன. இதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மரங்கள் விழுந்த இடங்களில் உள்ள மரத்தை அறுத்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இன்று ஒரு நாள் உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேட்டூர் அணை நீர்வரத்து 1.10 லட்சம் கன அடியைத் தாண்டியது! - Mettur Dam Water level
மேலும் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த மலை ரயில், குன்னூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் அரசு பேருந்துகள் மூலம் உதகைக்கு ரயில்வே நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் குன்னூரில் இருந்து உதகைக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: காவிரியில் வெள்ளப்பெருக்கு: 1.55 லட்சத்தை எட்டிய நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Flood in Cauvery River