ETV Bharat / state

மழை எதிரொலி; சின்ன வெங்காயத்தின் விலை குறைவு.. மூட்டை மூட்டையாக வாங்கிச் சென்ற விவசாயிகள்! - Onion Price Decrease - ONION PRICE DECREASE

Onion Price Decrease: சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் புஞ்சை புளியம்பட்டி வாரச் சந்தையில் விலை குறைந்து காணப்படும் நிலையில், கர்நாடக மாநில விவசாயிகள் மூட்டை மூட்டையாக வெங்காய விதையை வாங்கிச் சென்றனர்.

புஞ்சை புளியம்பட்டி சந்தை மற்றும் வெங்காயம் புகைப்படம்
புஞ்சை புளியம்பட்டி சந்தை மற்றும் வெங்காயம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 3:34 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி சந்தையில், வாரந்தோறும் வெங்காயச் சந்தை கூடுவது வழக்கம். அதில், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சின்ன வெங்காயம் மற்றும் விளைநிலங்களில் நடவு செய்யப்படும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில், புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதாவது, தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாய நிலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் காரணமாக, சின்ன வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். மேலும், வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயத்தின் விலையும் குறைந்து விற்பனையானது.

அதாவது, கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்ற விதை வெங்காயம், இன்று விலை குறைந்து கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையானதாகவும், விதை வெங்காய விலை குறைந்ததாலும், பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் விளை நிலங்களில் பயிரிட அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதிலும், குறிப்பாக கர்நாடக விவசாயிகள் அதிகளவில் வாங்கியதால், லாரியில் மூட்டைகள் ஏற்றப்பட்டு திம்பம் வழியாக கர்நாடகம் கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஆண்டு வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 வரை விற்பனையானதால், தற்போது விவசாயிகள் வெங்காயம் நடவு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். மேலும், மழையும் பெய்துள்ளதால் வெங்காயம் நடவு செய்ய சரியான தருணம் இது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேகவைத்த முட்டை ஓட்டை உரிக்க முடியவில்லையா? உப்புக்கு பதில் இத யூஸ் பண்ணுங்க.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.