ETV Bharat / state

தஞ்சையில் பாதாள சாக்கடை பணியின் போது தொழிலாளி உயிரிழப்பு - soil slide on Drainage Work

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 1:26 PM IST

Soil Slide on Drainage Work in Thanjavur: தஞ்சையில் பாதாள சாக்கடை குழாய் சீரமைப்புப் பணியின் போது, சுமார் 15 அடி பள்ளத்தில் மண் சரிந்து திடீரென ஏற்பட்ட விபத்தில் ஜெயநாராயண மூர்த்தி என்ற தொழிலாளி பலி, மற்றொரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படம்
மீட்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி பூக்காரத் தெரு, அன்பு நகர் உள்ளிட்ட 36வது வார்டு பகுதியில் கடந்த பல மாதங்களாக பாதாளச் சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. அதனை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் வந்தனர். அதையடுத்து பாதாளச் சாக்கடை குழாயை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று சுமார் 15 அடி ஆழப்பள்ளத்தில் சேதமடைந்த குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து, மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் மேலே வரும் போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவேந்திரன்(32) மற்றும் தஞ்சையைச் சேர்ந்த ஜெயநாராயண மூர்த்தி(27) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர்.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தேவேந்திரன் என்பவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த ஜெயநாராயண மூர்த்தியை மீட்பது சிறிது சவாலாக இருந்துள்ளது. அதனால், அவரை மீட்க 3 ஜேசிபி இயந்திரங்களை வைத்து தோண்டும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்புப்படையினர் சடலமாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கழிவு நீர் குழாய் பணியின் போது தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிரிழந்த ஜெயநாராயண மூர்த்திக்கு திருமண திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தில் 16 பேர் பலி.. சேதமடைந்த வீடுகளில் பணம், நகை கொள்ளை.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.