தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள வெம்பூரைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் குருசாமி (50). இவர் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பந்தல்குடியை நோக்கி தூத்துக்குடி - மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, உடன்குடியில் இருந்து சென்னை நோக்கி, சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி லட்சுமி சங்கர் ஆகியோர் காரில் வேகமாக வந்துள்ளனர். அப்போது குருசாமி வலதுபக்கம் திரும்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை எதிர்பார்க்காத காரில் வந்தவர்கள், குருசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியதில் குருசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், குருசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிக்அப் வேன் - பேருந்து நேருக்கு நேர் மோதல்! 10 பேர் பலி! 27 பேர் படுகாயம்! - UP Road Accident 10 Dead