ETV Bharat / state

கோவையில் வாக்கு மறுக்கப்பட்டதாக போராட்டம்.. கையில் அடையாள மை இருந்ததால் பரபரப்பு! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

COIMBATORE PROTEST: கோவையில், தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோரின் விரல்களில் வாக்கு செலுத்தியதற்கான அடையாளமாக மை இருந்தது பேசுபொருளாக மாறியுள்ளது.

COIMBATORE PROTEST
COIMBATORE PROTEST
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 7:51 PM IST

Updated : Apr 25, 2024, 8:04 PM IST

COIMBATORE PROTEST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, கோவை மாவட்டத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, பாஜகவினர் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், பாஜக மாநிலத் தலைவரும், அக்கட்சியின் கோவை வேட்பாளருமான அண்ணாமலை, கோவையில் ஒரு லட்சம் வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ‘பீப்பில்ஸ் ஃபார் அண்ணாமலை’ என்ற அமைப்பின் சார்பில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் ஏராளமான பொதுமக்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகவும், இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழுக்கம் எழுப்பிய பீப்பில்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பினர், தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு ஜூன் 4ஆம் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பீப்பில்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பை ஏற்படுத்தி, அவருக்காக வாக்கு சேகரித்து வந்ததாகவும், தாங்கள் வாக்கு சேகரித்த பொதுமக்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் வாக்குகளைச் செலுத்தி இருந்தற்கான அடையாளமாக மை விரலில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலில் நடுரோட்டில் ஆம்லெட் போட்ட இருவர்.. சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு! - Man Cooks Omelette On Road

Last Updated : Apr 25, 2024, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.