ETV Bharat / state

மஸ்கட் - சென்னை விமானம் டயர் வெடித்து விபத்து.. உயிர் தப்பிய 148 பயணிகள்! - Muscat to chennai flight tire burst - MUSCAT TO CHENNAI FLIGHT TIRE BURST

மஸ்கட்டில் இருந்து பயணிகளுடன் வந்த ஓமன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விபத்துக்குள்ளான விமானம்
விபத்துக்குள்ளான விமானம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2024, 7:00 AM IST

Updated : Oct 6, 2024, 7:33 AM IST

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது திடீரென விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் விமானத்தில் பயணம் செய்த 157 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 148 பயணிகள் 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 157 பேருடன் சென்னைக்கு வந்துள்ளது. நேற்று (அக்.05) பிற்பகல் 2 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி, ஓடு பாதையில் விமானம் ஓடிக்கொண்டிருந்த போது விமானத்தின் பின் பக்கத்தில் இடது பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.

இதனால், விமானத்தில் அதிர்வுகள் ஏற்பட்டதால், விமானத்துக்குள் இருந்த பயணிகள் பயந்து அலறியுள்ளனர். ஆனால், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக ஓடுபாதையில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்னை விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப் எனப்படும் தரை தள பணியாளர்கள், ஓடு பாதையில் நின்ற விமானத்தை இழுவை வண்டிகள் மூலமாக இழுத்து வந்து விமானங்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, வழக்கமான குடியுரிமை சுங்க சோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு இடையே விமான நிலைய பொறியாளர்கள் குழுவினர் டயர் வெடித்து பழுதடைந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயரை மாற்றி சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு.. நடுவானில் நிகழ்ந்ததால் பதற்றம்!

இந்த விமானம் வழக்கமாக மஸ்கட்டில் இருந்து பகல் 1.45 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு புறப்பட்டு செல்லும். அவ்வாறு, இந்த விமானத்தில் மஸ்கட் செல்ல 157 பேர் பயணிக்க இருந்தனர். அவர்களிடம் விமானம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று கூறிய அதிகாரிகள், அவர்களை விமான நிலைய ஓய்வறைகைகளில் தங்க வைத்துள்ளனர்.

விமானம் பழுதுபார்க்கப்பட்ட பின்பு மாலை 6.30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால். விமானத்தை முழுமையாக பழுது பார்க்க முடியாததால் இன்று சென்னையில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து என்று இரவு 7:30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.இதனால், அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த 157 பயணிகள் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, விமானம் பழுது பார்க்கப்பட்டு இன்று (அக்.06) காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனால் ஓமன் செல்ல வந்திருந்த 157 பயணிகள் சென்னையில் தவித்தனர். ஆனால், சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி, துணை விமானியை பயணிகள் பாராட்டியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 6, 2024, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.