சென்னை: ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து விரதம் கடைபிடித்து நோன்பு இருந்து வருகின்றனர். இந்த நிலையில், ரமலான் நோன்பை கடைப்பிடித்த 93 வயதுடைய சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரஷியா பேகம் என்பவர், கடந்த புதன் கிழமை (மார்ச் 20) மாலை நோன்பை முடித்து, நோன்புக் கஞ்சி அருந்தியபோது, அவர் அணிந்திருந்த பல் செட் கழன்று, உணவுக் குழாயில் சென்று அடைத்துக் கொண்டது.
கொக்கி போன்ற வடிவமைப்பைக் கொண்ட பல்செட், உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டதால் அவர் வலியால் துடித்துள்ளார். வலி தாங்காமல் துடித்த தாயை, அவரது மகள் ஷாகீர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, மூச்சு விட முடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர், அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, குறைவான இரத்த அணுக்கள், இரத்த கொதிப்பு போன்ற இணை நோயினால் பாதிக்கப்பட்டவரை, உள் நோயாளியாக அனுமதித்த மருத்துவக் குழுவினர், பல்வேறு உடல் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
கவலைக்கிடமாக இருந்தவரின் உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டிருந்த பல் செட்டை, உள் நோக்கி கருவி மூலம் 4 மணி நேரம் நடந்த சவாலான ஆப்ரேஷனை செய்து பல்செட்டை மருத்துவக் குழுவினர் எடுத்துள்ளனர். மருத்துவர்களின் இந்த அறுவை சிகிச்சையினால், 93 வயதான மூதாட்டி குணம் அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: திருத்தணியை மீட்ட விநாயகத்தின் பேத்தி முதல் பாமக தலைவரின் மனைவி வரை.. செளமியா அன்புமணியின் பின்னணி என்ன? - Who Is Sowmiya Anbumani