ETV Bharat / state

"அட்டைப் பூச்சியைப் போல் சுரண்டுவது அநியாயம்" - சாம்சங் தொழிலாளர்களுக்கு சீமான் நேரில் ஆதரவு! - SAMSUNG WORKERS STRIKE

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சாம்சங் தொழிலாளர்களுடன் சீமான்
சாம்சங் தொழிலாளர்களுடன் சீமான் (Credits - ETV Bharat Tamil Nadu and seeman x page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 11:04 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்களை வலியுறுத்திக் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று போராட்டத்திற்கு அனுமதி இல்லை என காஞ்சிபுரம் மாவட்டம் காவல்துறை அறிவித்தது.

இதையடுத்து தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 625 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களை இரண்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட 625 பேர் மீது இரண்டு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் நேற்று சாம்சங் போராட்டத்திற்கு தடை இல்லை, அமைதியான முறையில் போராடி கொள்ளாமல் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று வழக்கமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வரும் தொழிலாளர்களை சுங்குவார்சத்திரம் பகுதியில் குன்னம் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு அவ்வழியே வரும் தொழிலாளர்களை போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி கைது செய்தனர்.

இதையும் படிங்க: இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு.. அச்சத்தில் தவிக்கும் 112 குடும்பங்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

இது குறித்து தகவல் அறிந்த 200க்கும் ஊழியர்கள், சுங்குவார்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான விடுதிக்கு நுழைவாயில் ஒன்று கூடினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் சௌந்தரராஜன் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் காவல்துறையினர் அவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில் இன்று 32வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், "தொழிலாளர் நலனுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொழிற்சங்கம் தானே, அக்கோரிக்கையை நிறைவேற்றக் கூடாதா? 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரித்து அவர்களது உழைப்பை அட்டைப் பூச்சியைப் போல் சுரண்டுவது அநியாயம். இதனை தொழிலாளர் நலத்துறை இந்நாட்டில் ஏற்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் கூட்டணி தலைவர்கள் சொன்னால் தான், கோரிக்கையாக வைத்தால் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவி சாய்ப்பாரா. இதான் மக்கள் நலன் சார்ந்த அரசா மக்கள் நலன் சார்ந்த தலைமையா?" எனவும் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.