ETV Bharat / state

சீமானுக்கு வருத்தக் கடிதம் எழுதிய சிவராமன்.. மரணத்தில் என்ன சொல்கிறது நாதக? - NTK Seeman

NTK Seeman: பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிவராமன் மற்றும் சீமான்
உயிரிழந்த சிவராமன் மற்றும் சீமான் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 10:07 PM IST

சென்னை: கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து சீமான் கூறியதாவது, "கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வழக்கு கூட்டு வன்கொடுமை என்று அனைவருக்கும் தெரிகிறது. இதில் ஒருவரை மட்டும் கைது செய்து வழக்கை இழுத்துக் கொண்டு போவது தான் வேடிக்கையாக இருக்கிறது. திட்டமிட்ட வன்புணர்வு இது. கல்லூரியின் முதல்வர் இதை தற்கொலை என்று ஏன் சொல்கிறார், அதற்கான அவசியம் என்ன?

இந்த நாட்டில் நடக்கிற 100 குற்றங்களில் 99 குற்றங்கள் போதையில் தான் நடக்கின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் போதையினால் மட்டுமே வெட்டி இருக்க முடியும். இதுவரை பெற்ற தீர்வுகள் எல்லாமே போராடி பெற்றவைதான். தானாக எதுவும் நடக்கவில்லை. கரோனா காலத்தில் மருத்துவர்கள் தேவதைகளாக தெரிந்தனர். இப்போது அதே மருத்துவர்கள் தேவையற்றவர்களாக தெரிகின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு வெட்கி தலைகுனிய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது.

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் என்சிசி கேம்ப் நடத்தி, அதில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. சிவராமன் தவறு செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், அவரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சி தான். குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் அவர் இறந்திருக்கிறார்.

அவர் முன்பே எனக்கு வருத்தக் கடிதம் எழுதி, 'நான் சாகப் போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என்று கூறியிருந்தார். அதை நான் தம்பிகளிடம் விசாரிக்கச் சொல்லியிருந்தேன். அதனால் அவர் மனம் வருத்தப்பட்டு இப்படி செய்திருக்கலாம். எங்களுக்கு இதில் சந்தேகம் இல்லை. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்கவுன்டர் செய்ததை நாங்கள் எதிர்த்தோம். சிவராமன் உயிரிழப்பை எதிர்க்கவில்லை. உண்மையைச் சொல்லக் கூடியவர்களை கொன்றதால் அதை எதிர்த்தோம்” என்றார்.

தொடர்ந்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி சர்ச்சை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஸ்பெயினில் மட்டும் தான் யானை இருக்கிறதா? எங்கள் ஊரில் இல்லையா? யானை ஒரு தனி மனிதனுக்கோ, மாநிலத்துக்கோ, கட்சிக்கோ சொந்தமானதா? எங்கள் கட்சி சின்னத்துக்கு புலியைக் கேட்டபோது தேர்தல் ஆணையம், 'அது தேசிய விலங்கு' என்றனர்.

தமிழீழ அரசியலை நான் மட்டும் தான் பேச வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் பேசலாம். தமிழரின் பண்பாட்டு நீட்சி தான் நமக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில், விஜயின் நகர்வை நான் வரவேற்கிறேன். இதை நீங்களும் பாராட்ட வேண்டும். என் தம்பி செய்யாத சில அரசியலை அண்ணன் நான் செய்வேன்" இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருச்செங்கோடு சிறுமி கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.