ETV Bharat / state

ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் திமுக அரசின் நாடகம் - சீமான் காட்டம்! - NTK SEEMAN CONDEMNS ENCOUNTER

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 1:56 PM IST

NTK SEEMAN CONDEMNS ENCOUNTER: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம்,  சீமான்
என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம், சீமான் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருக்கினைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், சென்னை - மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய சுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி? இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை கைதியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது.

திமுக அரசின் நாடகம்?: வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது. உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கபட்டுள்ள நிலையில்,ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரண்டைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகமா அல்லது படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆகவே மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு! - Rowdy Tiruvengadam Encounter

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.