ETV Bharat / state

"நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது" - சீமான் பேச்சு! - NTK SEEMAN

தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா? நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே இருக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 9:24 AM IST

Updated : Oct 20, 2024, 1:39 PM IST

ஈரோடு: ஈரோட்டில் தமிழகப்பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் சார்பில் நேற்று நடைபெற்ற தமிழக பண்பாடு கண்காட்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு, கண்காட்சியில் தமிழர்கள் வரலாறு குறித்து வைக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்களையும் மண் சார்ந்த பொருட்களையும் பார்வையிட்டார்.

பின்னர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "திராவிடல்நல் திருநாடு" என்ற வார்த்தையை நீக்கியது என்பது உங்களுக்கு பிரச்னை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "ஆரியங்கோல் வழக்கொழிந்து" என்ற வார்த்தையை தூக்கியது யார்?

சீமான் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திராவிடல்நல் திருநாடு வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா?: எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்? திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது வராத கோபம், 2 வரியைத் தூக்கியதற்கு கொந்தளிப்பதா? தமிழில் எழுத, படிக்கத் தெரியாத மூன்று தலைமுறைகளை உருவாக்கியதுதான் திராவிடத்தின் சாதனை.

திசை திருப்ப முயற்சி: கீழடியில் கண்டெடுக்கப்பட்டது தமிழர் நாகரிகம்தான், திராவிட நாகரிகமோ அல்லது இந்திய நாகரிகமோ அல்ல. ஆளுநரை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நாங்கள் கொந்தளித்ததால் தான் மாற்றினார்கள் என்று சொல்வதற்கு தான் ஆளுநர் விவகாரத்தை பேசி வருகின்றனர். தீபாவளிக்கு தற்காலிகமாக 1,500 மதுக் கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கவனத்தில் கொள்ளாத வகையில் திராவிடம் விடப்பட்டது என்ற பிரச்சினை பெரிதாகப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'திராவிடம்' என்ற சொல் எப்படி வந்தது? - தமிழ்ப் பேராசிரியர் சீனிவாசன் அளித்த வரலாற்று விளக்கம்!

இந்தி எதிர்ப்பு: திமுகவிற்கு இந்தியை எதிர்க்க அருகதை தகுதி இல்லை. திமுகவினர் நடத்தும் பள்ளியில் இந்தி 2வது மொழியாக உள்ளது. இந்தியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் நுழைய விட்டது திராவிட ஆட்சிகள். காங்கிரஸ் உடன் அரசியல் லாபத்திற்காக கூட்டணி வைத்ததால். எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி தமிழகத்தில் வந்துவிட்டது. தற்போது வட மாநிலத்தவர்கள் ஒன்றரை கோடி பேர் உள்ளார்கள்.

விஜய்க்கு ஆதரவு: சென்னையில் மொத்தமாக 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தான் மழைநீர் வடிகால் கட்டமைப்பு உருவாக்க தேவைப்படும். எனினும், ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். யானை என்ன ஒரு கட்சிக்கு மட்டும் தான் சொந்தமா? இதையெல்லாம் விஜய் கண்டுக்கொள்ள மாட்டார். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தான் புகழ்பெற்ற விஜயை இடையூறு செய்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் தன்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை ஆதரிப்பேன். ஏன்னென்றால் அவர் என்னுடைய தம்பி. சேலத்தில் திமுக மாநாடு நடத்தும் போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால், விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்? பரந்தூர் விமான நிலையம் ஒருபோதும் கட்ட முடியாது என்னை தூக்கி தான் சிறையில் போட முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 20, 2024, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.