ETV Bharat / state

திராவிட நாடா, தமிழ்நாடா?.. அன்பில் மகேஷ் விவாதம் செய்ய தயாரா? - சீமான் சவால்! - TAMILTHAI VAZHTHU ISSUE

தமிழ்நாடு திராவிட நாடா? தமிழ்நாடா? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் விவாதம் செய்ய தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

அன்பில் மகேஷ், சீமான்
அன்பில் மகேஷ், சீமான் (Credits - anbil mahesh X Page, ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 7:12 PM IST

நாமக்கல் : நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு திராவிட நாடா? தமிழ்நாடா? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் விவாதம் செய்ய தயாரா? இடத்தை அவர் தேர்வு செய்ய தயாரா? யார் திராவிடர்? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும்.

தமிழக அமைச்சரவையில் யார் தமிழர்கள் உள்ளனர்? விரல் விட்டு எண்ண முடியுமா? திருமாவளவன் முதலமைச்சராக வருவதை வரவேற்கிறேன். அவருக்கு தகுதியிருக்கு ஒரு தமிழரா அவர் முதலமைச்சராகுவதை நான் தம்பியாக பெருமைப்படுகிறேன்.

சீமான் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருமாவளவன் முதலமைச்சராகும் கனவு பலிக்காது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு, முதலமைச்சராக வரக்கூடாது எனக் கூறுவதற்கு எல்.முருகன் யார்?. எல்.முருகன் மட்டும் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகலாமா?. தமிழர் நிலத்தில் திருமாவளவன் முதலமைச்சராக கூடாதா? உள் இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு போட்டால் முதலமைச்சராக விடமாட்டீங்களா? உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றோம், இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றோம்.

இதையும் படிங்க : “சீமானுக்கு தமிழ் மேல் அவமரியாதை” - அன்பில் மகேஷ் பதிலடி!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு திமுக அச்சத்தில் உள்ளது. நேர்மையாளனா, நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் எதைக் கண்டும் பயப்பட தேவையில்லை. ஈஷா யோகா மையம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதனை தடுக்க முடியாது.

இங்குள்ள இரு கட்சியினருக்கு தெரியாமல் எல்லாம் நடக்கிறதா ? பிரதமருடன் ஜக்கிவாசுதேவ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளார். பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் அங்கு வருகின்றனர். யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது என சொன்ன போது, அரசே இல்லை என கூறுகிறது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.