ETV Bharat / state

குறைந்தது கனமழை; வழக்கம்போல நம்பிக்கையுடன் கண்விழித்த சென்னை! - CHENNAI RAIN

சென்னை உள்பட வட மாவட்டங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பிருப்பதாகக் கூறி நேற்றும் இன்றும் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. இச்சூழலில், கனமழையின் தாக்கம் குறைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

NORTHEAST MONSOON CHENNAI RAIN LATEST UPDATE NO DOWNPOUR
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழையில் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 1:35 PM IST

Updated : Oct 16, 2024, 2:51 PM IST

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைவதால், அக்டோபர் 16ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது. தற்போது, அதிகனமழைக்கான வாய்ப்புகள் குறைவு எனவும், மிதமான மழை தொடர்ந்து இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில், மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 450 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து, மேற்கு - வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும், நல்லூருக்கும் இடையே நாளை (அக்டோபர் 17) காலை கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பதம்பார்த்த மழை:

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 சென்டிமீட்டரும், அதற்கு அடுத்தபடியாக திருவிக நகர், கொளத்தூர் மற்றும் அம்பத்தூரில் 22 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் 131 மில்லிமீட்டர் அளவு மழைப்பொழிவு இருந்தது.

போர் கால அடிப்படையில், வெள்ள நீர் வெளியேற்றம், தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களுக்கு கொண்டுவருவது போன்ற செயல்பாடுகளை அரசு கண்காணித்து வந்தது. தொடர்ந்து துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தது. தூய்மைப் பணியாளர்கள், மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, காவல்துறை, போக்குவரத்து காவல் பிரிவு, வருவாய்த் துறை என அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கியத் துறைகளின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கவனித்துவந்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மழை பாதித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று கள நிலவரங்களை ஆராய்ந்து மூத்த அமைச்சர்களுடன் இணைந்து தீர்மானங்களை எடுத்தார். துரிதமாக நடந்த மீட்புப் பணிகளாலும், மழை குறைந்ததாலும் சென்னை இம்முறை வேகமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

சீர்செய்யப்பட்ட சுரங்கப்பாதைகள்:

மொத்தம் சென்னையில் 21 சுரங்கப்பதைகளில் மழைநீர் தேங்கியது. அதில், இங்கு கீழ்வருமாறு பட்டியலிடப்பட்டிருக்கும் சுரங்கபாதைகளில் நீர் வெளியேற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதை அரசு தங்களின் செய்திக்குறிப்பில் உறுதி செய்துள்ளது.

  1. கத்திவாக்கம் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை
  2. மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
  3. வியாசர்பாடி சுரங்கப்பாதை
  4. எம்.சி. ரோடு சுரங்கப்பாதை
  5. ஸ்டேன்லி நகர் சுரங்கப்பாதை
  6. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை
  7. கொங்குரெட்டி சுரங்கப்பாதை
  8. பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை
  9. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
  10. ஹாரிங்டன் சுரங்கப்பாதை
  11. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை
  12. ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை
  13. துரைசாமி சுரங்கப்பாதை
  14. மேட்லி சுரங்கப்பாதை
  15. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
  16. பஜார் ரோடு சுரங்கப்பாதை
  17. மவுண்ட் சுரங்கப்பாதை
  18. தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை
  19. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
  20. அரங்கநாதன் சுரங்கப்பாதை

உணவு விநியோகம்:

அதிகளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முதலே அரசின் ஆவின் நிர்வாகம் 24 மணிநேரமும் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்று உறுதி அளித்திருந்தது. அதன்படி பால் விநியோகத்தில் எந்த தொய்வும் ஏற்படாமல் பால்வளத்துறை பார்த்துக்கொண்டது.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக, அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க
  1. மழை எச்சரிக்கைகள்: மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைகள் என்ன சொல்லுகிறது?
  2. கவச் தொழில்நுட்பம்: சிறப்புகள் என்ன? கவரைப்பேட்டை ரயில் விபத்தைத் தடுத்திருக்க முடியுமா?
  3. சென்னை மழை: எந்தெந்த பகுதியில் பாதிப்பு.. மீட்புப் பணிகள் குறித்த முழுத் தகவல்!
  4. சென்னை மழை: நேற்று முதல் இன்றுவரை

மெட்ரோ ரயில்கள் இயக்கம்:

காலை 9 மணிமுதல் இரவு 11 மணி வரை மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி கீழ்காணும் இடங்களில் மெட்ரோ சேவைகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.

  • சென்ட்ரல் மெட்ரோ முதல் சென்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ வரை ஐந்து நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
  • ப்ளூ லைன்: விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை 6 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும்.
  • வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும்.

இந்த சூழலில், கோயம்பேடு மெட்ரோ, சென்ட் தாமஸ் மவுண்ட், அரும்பாக்கம் மெட்ரோ ஆகிய இடங்களில் இருக்கும் வாகன நிறுத்தங்களை, அடுத்த அறிவிப்பு வரும்வரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

விமான சேவையைப் பொருத்தவரை, போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால், 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மதுரை, சேலம், ஷீரடி, மதுரை-சென்னை, ஷீரடி-சென்னை, சேலம்-சென்னை செல்லும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழையின் வேகம் குறைந்ததோடு, மக்கள் மெதுமெதுவாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். போர்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டதும், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாததும் சென்னை மற்றும் வட மாவட்ட மக்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.

etv bharat tamil nadu whatsapp channel link and QR Code
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

Last Updated : Oct 16, 2024, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.