மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் எஸ் ஏ ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை 10 மணி 20 நிமிடத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் இன்று திங்கட்கிழமை என்பதால், குறை தீர்க்கும் முகாமில் புகார் மனு தாக்கல் செய்ய மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்தார்.
ஆய்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "பட்டா மற்றும் ஆன்லைன் புகார் தொடர்பான மனுக்கள் குறித்து மேற்பார்வையிடுவதற்காகவும், பட்டா தொடர்பான பணிகளை செய்ய மாவட்ட ரீதியாக புது அதிகாரிகளை நியமிக்க ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது" என்றும் தெரிவித்தார்.
எதிர்பாராத விதமாக மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த் துறை இயக்குநர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட திடீர் ஆய்வால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:சவுக்கு சங்கர் குண்டாஸ் வழக்கு விவகாரம்: நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம்!