ETV Bharat / state

“வழக்கை திரும்பப் பெற அரசு முடிவெடுத்தால் அனுமதிக்கான அவசியம் இல்லை” - புதிய தலைமைச் செயலகம் கட்டட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கருத்து! - admk

New secreteriate case: புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை திரும்பப் பெற வேண்டும் என அரசு முடிவெடுத்தால், யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்த்தனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

chennai high court
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 6:21 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, 2006- 2010 ஆண்டுகளில் சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியது. ஒரு ஆண்டு, அங்கு சட்டசபை நடந்தது.

இதன் பின்னர் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதலைமைச்சராக பொறுப்பேற்றதும், புதிய தலைமைச் செயலகம் செயல்படவில்லை. மேலும், புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் முறைகேடு நடந்து இருப்பதாக விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தது.

இதனையடுத்து முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, அபோதைய அதிமுக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அதிமுக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற, தற்போதைய திமுக அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை இந்த வழக்கில் இணைக்கக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் இன்று (பிப்.01) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த பின், கடைசி நேரத்தில் வழக்கில் இணைக்கும்படி மூன்றாவது நபர் கோர முடியாது என்றும், இதுநாள் வரை வழக்கில் இணைக்க கோராத ஜெயவர்த்தன், அரசு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்த பின் வழக்கில் இணைக்க கோரியுள்ளது தவறு என்றும், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு உரிமை உள்ளது என்றார்.

ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. மனுதாரரின் தந்தையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார்” உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்காத நிலையில், அதன் பரிந்துரைகளை ஆதாரமாக கருத முடியாது என்றார். ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “பொதுநலன் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? உயர் நீதிமந்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால், நீதிமன்றத்தை அணுகவில்லை. ஆனால், தற்போதைய அரசு எந்த காரணமும் தெரிவிக்காமல் வழக்கை வாபஸ் பெறக் கோருவதால், வழக்கில் இணைக்க கோருவதாக” குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு செய்தால், யாரிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயவர்த்தன் தரப்புக்கு கேள்வி எழுப்பியபோது, அதற்கு இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில் கோரிக்கை வைப்பதாகவும், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்ததாகவும், அதற்கு முன் வாபஸ் பெறும் எண்ணம் இல்லாததால், வழக்கில் இணைக்க கேட்கவில்லை எனவும் விளக்கமளித்தார். இதையடுத்து, வாதங்களின் தொடர்ச்சிக்காக விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.