சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து சமீபத்தில் தான் சாந்தன் மற்றும் ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான சாந்தன் இலங்கைக்குச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார், 32 ஆண்டுகள் இந்தியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சாந்தனுக்கு இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இலங்கை தூதராக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் அனுப்பப்படுவார் என்றும் சாந்தன் விரைவில் இலங்கை செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரச் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி தெரிவித்ததாவது, சாந்தனின் கல்லீரலின் செயல்பாடுகளில் பிரச்சனை உள்ளது. அதனால், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மேலும் சிகிச்சையில் சாந்தனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கல்லீரல் மட்டுமல்லாமல் பல்வேறு உடல் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை-சோழவந்தான் ரயில்வே மேம்பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்