ETV Bharat / state

தேர்தலில் சர்ச்சைக்குள்ளான பூரி ஜெகநாதர் கோயில் கருவூல புதையல்...நகைகளை மதிப்பிடும் பணி எப்போது தொடங்குகிறது?

பூரி ஜெகநாதர் கோயில் கருவூல புதையல் அறை விவகாரம் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் எதிரொலித்தது. இந்த நிலையில் கோயிலில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிநித்துவ படம்
பிரதிநித்துவ படம் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

பூரி: ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் சர்ச்சைக்குள்ளான பூரி ஜெகநாதர் கோயில் கரூவூல புதையல் அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழும் பூரி ஜெகநாதர் கோயிலில் கரூவூல புதையல் அறையில் மன்னர்கள் தெய்வங்களுக்கு வழங்கிய விலைமதிப்பற்ற ஆபரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறை கடைசியாக 1985ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி திறக்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு அறையை மீண்டும் திறக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. அந்த அறைக்கான சாவியை தேடியபோது, அது காணவில்லை என்று தெரியவந்தது. இந்தச் சூழலில் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடி, “பிஜேடி ஆட்சியில் பூரி ஜெகநாதர் கோயில் பாதுகாப்பாக இல்லை. ஆலயத்தின் கரூவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது. அதனை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?” என பேசினார். ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு குறித்து பிரதமர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோயில் புதையல் அறை சாவி குறித்த சர்ச்சை; ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

இந்த நிலையில், நிலத்தடி ஊடுருவும் ரேடார் முறையில் பூரி ஜெகநாதர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கோயிலில் ரகசிய சுரங்கம் ஏதும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் கோயில் நகைகள் வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தில் சிறிய விரிசல் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இது கார்த்திகை மாத திருவிழா முடிவடைந்ததும் இந்த சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஒடிசா மாநில சட்டத்துறை அமைச்சர் பிரித்திவ்ராஜ் ஹரிசந்திரன், "மத்திய தொல்லியல் துறையினர் கட்டமைப்பில் நேரிட்டுள்ள பழுதை சரி செய்த பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கருவூல அறையில் உள்ள நகைகள் மதிப்பிடப்படும்,"என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.