ETV Bharat / state

கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை! - Nilgiris Schools leave due to rain - NILGIRIS SCHOOLS LEAVE DUE TO RAIN

Nilgiris Schools leave: கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நீலகிரியில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 9:15 AM IST

நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே உள்ள நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் மழை கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை முதல் அதி கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. கடந்த ஓரிரு வாரத்தில் பல நாட்கள் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நீலகிரியில் வசித்துவரும் பொதுமக்கள், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சிக்கி பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தில் மாணவ, மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரியில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நீலகிரியில் தொடரும் கனமழை.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு! - heavy rain in nilgiris

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.