ETV Bharat / state

விசிக, நாதக கட்சிகளுக்கு மறக்க முடியாத 2024 தேர்தல்! - ஏன் தெரியுமா? - ntk vck future political - NTK VCK FUTURE POLITICAL

ntk vck party: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கும், இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கான அந்தஸ்தை பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளன.

திருமாவளவன் மற்றும் சீமான்
திருமாவளவன் மற்றும் சீமான் (Credit - Etv Bharat Tamil Nadu and tirumavalavan x page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 6:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தலித்துகளுக்கான கட்சியாக அறியப்பட்டு, அனைத்து சமூகத்தினருக்கான கட்சியாக வளர துடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முதன்முதலாக களமிறங்கியது. அந்த தேர்தலில் தமாகாவுடன் கூட்டணி அமைத்த விசிக, பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் தனித் தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றி அளித்த நம்பிக்கையில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கடலூரில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் திமுக கூட்டணியில் தனித்து செயல்படமுடியவில்லை எனக்கூறி பதவியை ராஜினாமா செய்தார் திருமாவளவன்.

அதனை தொடர்ந்து 2004 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் தவிர்க்கமுடியாத அரசியல் புள்ளியாக உருவெடுத்தார். தற்போது வரை தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக இருந்துவரும் விசிகவுக்கு 2024 பொதுத்தேர்தல் முடிவுகள் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இரண்டிலும் வெற்றி பெற்றபோதும், ஒரு தொகுதியில் மட்டுமே தனிச் சின்னத்தில் போட்டியிட்டதால் மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

விசிகவுக்கு அங்கீகாரம்: ஆனால், இம்முறை சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிக பானை சின்னத்தில் போட்டியிட்டது. இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 1,03,554 லட்சம் வாக்குகள் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் விசிக தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளதால் அதற்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நாம் தமிழர்: சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி முதன்முதலில் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்தியது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட இக்கட்சியின் வாக்கு சதவீதம் 3.87 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2024 மக்களவை பொதுத்தேர்தலில் 8.22% வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்த்தை பெறவுள்ளது நாம் தமிழர் கட்சி.

விசிகவை பொறுத்தவரை, நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திப்பதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு தேர்தல்களிலும் வெற்றியை கண்டுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக போன்ற தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வளர்ந்த கட்சியாகவே விசிக பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் வளர்ச்சி: ஆனால், நாம் தமிழர் கட்சி இதுவரை கூட்டணி அமைக்காமல் தேர்தலை சந்தித்து வருவது மட்டுமல்லாமல் போட்டியிடும் தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களுக்கு சரிசமமாக பெண் வேட்பாளர்களையும் களமிறக்கி வருகிறது.

அடுத்த தலைமுறை வாக்காளர்கள்: அரசியல் அரங்கில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்ற கொள்கையோடு தேர்தலை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி, இளம் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவை பெருக்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.

கூட்டணிக்கான காரணம்: ஆனால், மதவாத சக்திகள் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது எனவும், பட்டியலின மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றும் கூறிவரும் திருமாவளவன், இந்த காரணங்களுககாக திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளுடன் தேர்தலின்போது தொகுதி பங்கீட்டில் சமரசம் செய்ய வேண்டி உள்ளதாக சில தருணங்களில் தமது ஆசங்கத்தை திருமாவளவன் வெளிப்படுத்துவதுண்டு.

இந்த சிக்கல்களை தவிர்க்கவே சீமான் எந்த கட்சியிலும் கூட்டணி அமைக்காமல் இருக்கிறார். ஆனால், நாம் தமிழர் கட்சி ஏதாவதொரு கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது திருமாவளவனின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி கூட்டணி அமைத்தால் '' அண்ணன் திருமாவளவனை போல சீட்டுக்காக காத்திருக்கும் நிலை எனக்கும் வந்துவிடும்'' என்பதே சீமானின் நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில், விசிக மற்றும் நாதக மாநில கட்சி அங்கீகாரத்தை பெறுவதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் 'மற்றவை' பட்டியலில் வைத்து இதுவரை பார்க்கப்பட்ட நிலை மாறி, பிரதான கட்சிகளின் பட்டியலில் இவ்விரு கட்சிகளும் இடம்பெற உள்ளது. ஒரே நேரத்தில் மாநில கட்சி அங்கீகாரத்தை பெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் பயணம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இக்கட்சிகளின் அபிமானிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: விருதுநகரில் மறுவாக்குப்பதிவு? தேமுதிக புகாருக்கு தலைமைத் தேர்தல் அதிகாரியின் ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.