ETV Bharat / state

சந்துக்குள்ள புகுந்தாலும் விடமாட்டோம்.. கோவையில் எலக்ட்ரிக் ரோந்து பைக் அறிமுகம்! - New Launch police patrol bike - NEW LAUNCH POLICE PATROL BIKE

Coimbatore Police Patrol Bike Launch: சிறிய தெருக்களிலும் எளிதாக போலீசார் ரோந்து செல்வதற்கு எலக்ட்ரிக் ரோந்து பைக்குகள் மிக உதவியாக இருக்கும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

எலக்ட்ரிக் ரோந்து பைக்கை இயக்கும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
எலக்ட்ரிக் ரோந்து பைக்கை இயக்கும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 9:29 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் காவல் ரோந்துப் பணிகளுக்காக சிறிய ரக 'எலக்ட்ரிக் ரோந்து பைக்' (Electric Patrol Bike) வாகனத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இயக்கி தொடங்கி வைத்தார். இந்த பைக் குறித்து அவர் கூறுகையில், “50 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனத்தை தனியார் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எலக்ட்ரிக் ரோந்து பைக் குறித்து காவல் ஆணையர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

சிறிய தெருக்களில் ரோந்து செல்வதற்கு இந்த பைக்குகள் உதவியாக இருக்கும். பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களைக் கொடுக்கும் வகையில் இந்த வாகனத்தில் ஒலிபெருக்கியும் இணைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், விரைவில் கூடுதலாக சில எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. ஏற்கனவே இதேபோல் கோவை மாநகர காவல் நிலையங்களில் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுமூகமாக அமைதியாக சுதந்திர தின விழாவை கொண்டாடிட மாநகர் முழுவதும் 2,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் தங்கி உள்ளவர்களின் நடவடிக்கைகளும், தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வாகனத்தை கண்டுபிடித்த குமரகுருபரர் கல்லூரியின் ஆராய்ச்சி மாணவர்கள் கூறுகையில், “முதலில் இந்த கண்டுபிடிப்பை நாங்கள் எங்கள் கல்லூரியின் செக்யூரிட்டிகளுக்காக கண்டுபிடித்தோம். அவர்கள் கல்லூரி முழுவதும் சுற்றிக் கண்காணிக்க இந்த ’எலக்ட்ரிக் ரோந்து பைக்' மிகவும் பயன்படும். அதேபோல் தான் தற்போது காவாலர்களின் ரோந்துப் பணியை எளிமையாக்க இந்த பைக் பயனுள்ளதாக இருக்கும் என கண்டுபிடித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: CEIR போர்டல் மூலம் 309 மொபைல்போன்கள் கண்டுபிடிப்பு.. உரிமையாளரிடம் ஒப்படைத்த எஸ்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.