ETV Bharat / state

சாக்குப் பையில் சுருட்டி சாலையில் வீசப்பட்ட குழந்தை.. நேரில் சென்று நடவடிக்கை எடுத்த தருமபுரி ஆட்சியர்! - new born female child rescued - NEW BORN FEMALE CHILD RESCUED

New Born Female Child Rescued : தருமபுரி மாவட்டம், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாக்கு பையில் கட்டி சாலையில் வீசிய சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீட்ட குழந்தை தொடர்பாக மருத்துவரிடம் கலெக்டர் ஆலோசனை
மீட்ட குழந்தை தொடர்பாக மருத்துவரிடம் கலெக்டர் ஆலோசனை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 12:46 PM IST

தருமபுரி: பாலக்கோடு அடுத்த கொம்மநாயக்கனஅள்ளி அருகே தருமபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகுரலை கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அருகே சென்று பார்த்த போது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை சாக்கு பையில் சுருட்டி வைத்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து உடனடியாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலக்கோடு போலீசார் குழந்தையை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையைப் பார்த்து மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கினார்.

பின்னர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : அரசு ஆவின் ஆலை இயந்திரத்தில் தலைமுடி சிக்கி பெண் தொழிலாளி பலி - aavin employee accident

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.