ETV Bharat / state

“1,912 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்”.. சர்வதேச செவிலியர் தினத்தில் மா.சுப்பிரமணியன் தகவல்! - International Nurses Day

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 1:59 PM IST

International Nurses Day: மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்து 912 எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செவிலியர் தினத்தில் செவிலியர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மா.சுப்பிரமணியன் புகைப்படம்
சர்வதேச செவிலியர் தினத்தில் செவிலியர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மா.சுப்பிரமணியன் புகைப்படம் (CREDIT - ETV Bharat Tamil Nadu)

சென்னை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேள் அம்மையாரின் பிறந்தநாளான ஒவ்வொரு மே 12ஆம் தேதியும் சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டிற்கான கருப்பொருளாக, செவிலியர்கள் தினத்தைப் பொறுத்தவரை ‘Our Nurses Our Future – The Economic Power of Care’ எனும் நோக்கத்தோடு செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நம்முடைய ‘தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின்’ நிர்வாகிகள் நம்மைச் சந்தித்து, குறிப்பாக தி.மு.க. அரசு பொறுப்பேற்றதையடுத்து, செவிலியர்களுக்காக தொடர்ந்து தொண்டாற்றி வருகிற முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிற வகையில், தங்களுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவிகிதத்திற்கும் மேலான கோரிக்கைகள் முழுமை பெற்றுள்ளது. தி.மு.க அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு ஆயிரத்து 412 ஒப்பந்த செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். ஏற்கெனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்தவர்களுக்கு ரூ.16 ஆயிரமாக சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

அது மட்டுமல்லாது, ஒப்பந்த செவிலியர்களாக மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல ஆண்டு காலமாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருந்தனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு ஆயிரத்து 912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற ஓர் மகத்தானத் திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10 ஆயிரத்து 969 பேர் நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்டதற்குப் பிறகு பகுதி நேரப் பணியாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு சம்பளம், சம்பளம் என்று சொல்வதைக் காட்டிலும் ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டு, ரூ.5 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

செவிலியர்களின் பணியிடமாற்றம் என்பது பல ஆண்டுகளாக குழப்பமாக, குளறுபடியாக இருந்தது. அதற்குத் தீர்வு காண்கிற வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 9 ஆயிரத்து 535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர்கள் விரும்புகிற பணியிடங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.

எம்.ஆர்.பி. மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிற பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையோடு நியமனம் செய்யப்படுகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னாள் கிராம சுகாதார செவிலியர்கள் வி.எச்.என். 2 ஆயிரத்து 400 பேர் பணியமர்த்தப்படுகிற பணியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செவிலியர் சங்கத்தின் சார்பில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னாலேயே தமிழ்நாடு அரசிற்கு வைத்தக் கோரிக்கை சிறந்த செவிலியர்களுக்கு அவர்களை ஊக்கமளிக்கிற வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்திருந்தார்கள்.

அந்த கோரிக்கையையும் முதலமைச்சர் நிறைவேற்றி இன்றைக்கு 19 செவிலியர்களுக்கு விருதுகள் வழங்குகிற தேர்வுக்கான பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததற்குப் பிறகு அந்த விருதுகள் வழங்கப்படும். இன்றைக்கு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்பாக பொது சுகாதாரத் துறை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் கொசு தான் காரணம், கொசுவில் இருந்து பரவும் இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வீடுகளை ஒட்டி இருக்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கேரளாவில் இருந்து 13 வழித்தடங்கள் வாயிலாக தமிழ்நாடு வருபவர்களை எல்லையில் கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து ஆரம்பித்த விஜய்.. எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து! - Vijay Bday Wishes To EPS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.