ETV Bharat / state

சீமான் மீது வழக்கு பதிய எஸ்சி எஸ்டி ஆணையம் உத்தரவு! - Seeman

Seeman: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து பேசிய போது ‘சண்டாளன்’ என்ற வார்த்தையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உபயோகித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சீமான்
சீமான் (Credits - Seeman 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 8:12 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து 'சண்டாளன்' எனக் கூறினார். இதனால் தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்தில், ராஜேஷ் என்பவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். ஆனால், புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, எஸ்சி, எஸ்டி ஆணையத்திடம் ராஜேஷ் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது ‘சண்டாளன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இதே வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எஸ்பி வருண்குமார் அளித்த புகார்; சாட்டை துரைமுருகன் முன் ஜாமீன் கோரி மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.