ETV Bharat / state

"கழிவுநீர் கால்வாய் இறப்பு எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்" - தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் - SEWAGE WORKERS BOARD CHAIRMAN - SEWAGE WORKERS BOARD CHAIRMAN

National Sewage Workers Board Chairman Venkatesan: கழிவுநீர் கால்வாய் இறப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது எனவும், ஆகையால், 2002ஆம் ஆண்டு வேலைக்கு சேரந்த தூய்மை பணியாளர்களை தமிழக அரசு மனிதாபிமானம் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன்
தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 8:36 AM IST

Updated : Jun 12, 2024, 6:35 PM IST

சென்னை: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில், களப்பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், பொறியியல் இயக்குநர் மி.ஜெய்கர் ஜேசுதாஸ், பொது மேலாளர் இரா.இராஜகிருபாகரன், தலைமைப் பொறியாளர் ஆர்.சிவமுருகன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன், "இந்த கூட்டத்தில் முக்கியமான கோரிக்கையைத் தொழிலாளர்கள் வைத்திருக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் 2002-ல் வேலைக்கு சேர்ந்த போது அவர்களை நிரந்தரம் செய்யவில்லை. 2009க்கு பிறகு தான் கான்ட்ராக்ட் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. 2002-ல் வேலைக்கு சேர்ந்தவர்களையும் நிரந்தர பணியாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசு மனிதாபிமானம் அடிப்படையில் அவர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களது கோரிக்கை நியாயமான கோரிக்கை, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் இதில் கவனம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மற்றவர்கள் வேலை செய்யும் போது நோய் தாக்குமா என்று தெரியாது. ஆனால், இவர்கள் நோய் தாக்கக்கூடிய இடத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

அவர்களுக்கு பிஎஃப் தொகை எடுக்கிறார்களா? இல்லையா?, ஈஎஸ்ஐ எடுக்கிறார்களா என்பதும் தெரியவில்லை, பல நபர்களுக்கு இன்சூரன்ஸ் கூட இல்லை. தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது. நிரந்தர பணியாளர்களுக்கு 90% பிரச்சனை இல்லாமல் உள்ளது. கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் டைரக்ட் பேமெண்ட் சிஸ்டம் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும்.

தேசிய ஆணையம் உள்ள நிலையில் நாங்கள் மாநில ஆணையம் வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஏற்கனவே 7 மாநிலங்களில் இது இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதுபோன்ற ஆணையத்தைக் கேட்கின்றோம். தூய்மை பணியாளர்கள் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்ய ஏதுவாக கர்நாடகாவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு அதற்கு ஏராளமாக நிதி வழங்கி வருகிறது. 50 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில் இந்த உதவி செய்யப்படுகிறது. 5 தூய்மை பணியாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து கூட இதைப் பெற முடியும்.

தமிழ்நாட்டில் 2022ல் இருந்து ஊழியர்கள் வேலை விட்டுச் செல்லும் பொழுது ஒரு காலிப்பணியிடம் கான்ட்ராக்ட் ஆட்களிடம் கொடுக்க வேண்டும் எனக் கூறி விடுகிறார்கள். இது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். 90% பேர் எஸ்சி / எஸ்டி தான் இதில் பணியாற்றுகிறார்கள். 12 ஆயிரம் மட்டும் தான் அவர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இது இல்லை என்றால் 30 ஆயிரம் 40 ஆயிரம் வரை சம்பளமாகக் கிடைக்கும்.

இந்தியாவிலே கழிவுநீர் கால்வாயில் இறப்பவர்களில் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் இதையே கூறி இருப்பார். பல்வேறு திட்டங்களில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. இந்த நிகழ்வால் தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது. இது குறித்தானா விழிப்புணர்வு நிகழ்வைத் தமிழக அரசு அதிகமாக நடத்த வேண்டும். துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக, பெரிய கட்டடம், மால்கள் போன்ற தனியார் அமைப்பில் வேலை செய்யும் பொழுது தான் உயிரிழப்பும் அதிகமாக ஏற்படுகிறது. அதுவும் ஆயிரம் அல்லது 1,500 ரூபாய் வேலைக்குச் சென்று உயிரிழப்பு ஏற்படுகிறது. வருமானம் குறைவாக உள்ளதால் தான் அவர்கள் இதுபோன்று தனியார் அமைப்புகளில் வேலைக்குச் செல்கின்றனர். கழிவுநீர் கால்வாய்களைச் சுத்தம் செய்யும் இயந்திரம் தமிழ்நாட்டில் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளது.

ஆனால், குஜராத், டெல்லி, கேரளா ஆகிய இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் அதிக அளவு இருக்கும் பொழுது தமிழ்நாட்டில் மட்டும் மிகக் குறைவான அளவில் உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றும் நபர்கள் கைகளில் கையுறை இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் அவர்களுக்கு மாற்றாக ஐஐடி மாணவர்களிடம் பேசி வேறு வகையான கையுறைகளைத் தயார்ப்படுத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரி: வீட்டின் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?

Last Updated : Jun 12, 2024, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.