ETV Bharat / state

“திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது" - ஆர்.என்.ரவி பேச்சு! - RN Ravi - RN RAVI

RN Ravi: மாநில பல்கலைக்கழகங்களின் படிப்புகள், பாடத்திட்டத்தில் தேசிய சுதந்திர இயக்கம் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி (Credits: RAJ BHAVAN, TAMIL NADU 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 9:15 PM IST

Updated : May 28, 2024, 10:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநரும், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 28) நடைபெற்ற தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "நாட்டில் தங்களுக்குள்ள ஏராளமான வாய்ப்புகளைப் பற்றி நம் மாணவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை. திறமையான மாணவர்களான நமது முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட எந்த ஒரு ஆய்வு உதவித்தொகையின்றியும் அல்லது மாதத்துக்கு சுமார் ரூ.5,000 என்ற சொற்பத் தொகையைப் பெறுவதும் கவலைக்குரிய விஷயம்.

போதுமான வழிகாட்டுதல் மற்றும் உந்துதல் இல்லாததால், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நடத்தும் என்இடி - ஜேஆர்எஃப் ஃபெலோஷிப் மூலம் அவர்களால் மாதத்துக்கு சுமார் ரூ.40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பெற முடியவில்லை. இத்தொகை கெளரவ விரிவுரையாளர்கள் வாங்கும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட இரட்டிப்பானதாகும்.

நமது மாநிலத்தில் உள்ள சில தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த விஷயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, இதுபோன்ற தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்" என ஆளுநர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பி.ஏ., எம்.ஏ வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் நிலவும் ஏற்றுக் கொள்ள முடியாத சிதைவுகள். மாநில பல்கலைக்கழகங்களின் படிப்புகள், பாடத்திட்டத்தில் தேசிய சுதந்திர இயக்கம் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரம் இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்களுடன் போரிட்டனர். பலர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். தேவகோட்டை, பெருங்காமநல்லூரில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது.

பாளையங்கோட்டையில் பாளையக்காரர்களின் எதிர்ப்பு மற்றும் மக்கள் எழுச்சிகள் மற்றும் அவற்றில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்" என்று ஆளுநர் குறிப்பிட்டு, அதில் ஒரு சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டினார்.

மகாத்மா காந்தி 16 முறைக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவர் முன்னெடுத்த சுதேசி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம் போன்றவை தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும், தமிழ்நாட்டு மக்கள் அவற்றில் முக்கிய பங்கு வகித்தனர். ஆங்கிலேயர்கள் வங்காளத்தை வகுப்பு ரீதியாகப் பிரித்தபோது, ​​தமிழ்நாட்டில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது. அதுவே சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளை தேசிய சுதந்திர இயக்கத்தில் சேரத் தூண்டியது.

பஞ்சாப்பில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமடையச் செய்ததுடன், இளம் காமராஜர் தனது படிப்பை கைவிட்டு தேசிய சுதந்திர இயக்கத்தில் ஈடுபடத் தூண்டியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்தது.

ஆனால், அவற்றை விளக்க ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பில், பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம், நமது பாடத்திட்டத்தில் இருந்து முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. மாறாக, திராவிட இயக்கக் கதைகளால் அப்பாடத்திட்டம் நிரம்பியுள்ளது.

சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வை பொறுத்தமட்டில், அய்யா வைகுண்டரின் அய்யா வழி இயக்கம், வள்ளலாரின் சன்மார்க்க இயக்கம், தலித் தலைவர் சுவாமி சகஜானந்தா தலைமையிலான நந்தனார் இயக்கம் என அனைத்து இயக்கங்கள் அவற்றில் தவறவிடப்பட்டுள்ளன.

19ஆம் நூற்றாண்டில், பல லட்சம் தமிழ் மக்கள் ஆங்கிலேயர்களால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலேசியா, இலங்கை, ஃபிஜி ஆகிய நாடுகளில் உள்ள அவர்களது காலனிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பிரிட்டிஷ் நில பிரபுக்களின் அடிமைகளைப் போல ஏலம் விடப்பட்டனர். விலங்குகளைப் போல நடத்தப்பட்டனர். எதிர்த்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

இந்திய விடுதலைக்காக லட்சக்கணக்கான தமிழ் மக்களின் துயரங்களையும், தியாகங்களையும், ஆங்கிலேயர்களால் எண்ணற்ற மக்கள் பட்ட துன்பங்களையும் அழிப்பதென்பது, நமது எண்ணற்ற தியாகிகளை அவமதிப்பது மட்டுமின்றி, நமது முன்னோர்களின் உண்மையான வரலாற்றையும், தியாகத்தையும் மறுப்பதுமாகும். இது நமது இளைஞர்களிடையே தேசிய உணர்வை பலவீனப்படுத்தும். மேலும், இளைஞர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து உணர்வுப்பூர்வமாக துண்டிக்கும் சூழல் அமைப்பை வளர்க்கிறது" என்று ஆளுநர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், துணை வேந்தர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை ஆளுநர் வழங்கினார். என்இடி - யுஜிசி - சிஐஎஸ்ஆர் தேர்வுகளில் தகுதி பெற்று ஜூனியர் ஆய்வு உதவித்தொகை பெற்ற மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் தாங்கள் தயாரான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், இந்த இரண்டு நாள் மாநாட்டில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ் குமார், ஆளுநரின் செயலாளர், மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், மாநில பல்கலைக்கழகங்களின் ஆய்வறிஞர்கள், மாணவர்கள், ஆளுநர் மாளிகை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமரின் தியானம் உறுதி.. வெளியான பயண விவரம்! - Modi Kanyakumari Schedule

Last Updated : May 28, 2024, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.