நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் செல்வராஜ், அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை விட 2,08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணைய இணைத்தள விபரம்:
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | செல்வராஜ் | சிபிஐ | 4,65,044 |
2 | சுர்ஜித் சங்கர் | அதிமுக | 2,56,087 |
3 | கார்த்திகா | நாதக | 1,31,294 |
4 | ரமேஷ் கோவிந்த் | பாஜக | 1,02,173 |
- நாகை மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி, இந்திய கம்யூனிஸ்ட - 450203, அதிமுக - 248246, நாம் தமிழர் கட்சி - 124994 வாக்குகளை பெற்றுள்ளன. அதிமுகவை விட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுமார் இரண்டு லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளதால் அக்கட்சியின் வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி அனேகமாக உறுதியாகி உள்ளது.
- 2024 மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் என 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 9,67,694 (71.94%) வாக்குகள் பதிவாகி இருந்தன.
- 3 மணி நிலவரம் - சிபிஐ வேட்பாளர் முன்னிலை: முன்னதாக 3 மணி நிலவரப்படி, சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 2,14,297 வாக்குகளுடன் முன்னிலை வகித்தார். அதேபோல, அதிமுக வேட்பாளர் சுர்தீஷ் சங்கர் 113925 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், நாதக வேட்பாளர் கார்த்திகா 60497 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்தனர்.
2019 வெற்றி நிலவரம் என்ன?: 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மறைந்த எம்.செல்வராஜ் 5,22,892 வாக்குகள் பெற்று 2,11,353 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சரவணன் 3,11,539 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் செங்கொடி 70,307 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 51,448 வாக்குகளும் பெற்றனர். 2019ல் மொத்தம் 10,02,208 (78.3%) வாக்குகள் பதிவாகியிருந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; நாகை தொகுதியில் வாகை சூடப்போவது யார்? - TN Lok Sabha Election Result 2024