சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் வழக்கம்போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கென 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் களமிறங்கினர்.
கடந்த முறை போல கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், சின்னம் அறிவிக்காமலேயே கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் சீமான். பின்னர், நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை வழங்கியது.
மூன்றாவது கட்சி: இதனையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தமது சின்னத்தை அறிமுகம் செய்த சீமான் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி திமுக, அதிமுக அடுத்த மூன்றாவது கட்சியாக தேர்தலில் பங்காற்றும் என சோசியல் மீடியாவில் எப்போதும் போல பேச்சுக்கள் எழுந்தன. குறிப்பாக, பாஜகவை பின்தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறும் என்றும் சீமானின் ஆதரவாளர்கள் கருதினர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி பல்வேறு இடங்களில் கடந்த முறையை விட கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதோடு, 8 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
மே 19ஆம் தேதி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து கொண்டிருக்கிறது. இதில் திமுக 39 தொகுதிகளிலும் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. அதனை அடுத்து அதிக இடங்களில் அதிமுக, பாஜக கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதற்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளனர். அந்த வகையில், இன்று 2.30 மணி நிலவரப்படி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் - 2,56,426
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் - 1,50,127
நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர் - 22,629
அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் - 19,347
புதுச்சேரி மக்களவைத் தொகுதி
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் - 1,66,493
பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் - 1,31,046
நாம் தமிழர் வேட்பாளர் மேனகா - 15,054
அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் - 9,651
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி:
திமுக வேட்பாளர் கனிமொழி - 2,55,531
அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி - 70,095
நாம் தமிழர் வேட்பாளர் ரொவினா ரூத் ஜான் - 57,859
அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் - 54,952
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி:
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் - 2,71,251
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் - 1,89,921
நாம் தமிழர் வேட்பாளர் பா.சத்தியா - 52,205
அதிமுக வேட்பாளர் ஜான்ஸிராணி - 49,109
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்:
காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் - 70,521
பாஜக வேட்பாளர் நந்தினி - 36,207
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெமினி - 5,744
அதிமுக வேட்பாளர் ராணி - 3,976
இதையும் படிங்க: ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறார் சந்திரபாபு நாயுடு.. பாஜக கூட்டணி அமோகம்!