ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சென்னை - பெங்களூரு ரயில் தடத்தில் முகுந்தராயபுரம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷனில் மாலை 4.30 மணியளவில் செல்லும் பாதை மற்றும் வரும் பாதை என இரு வழித்தடங்களிலும் சிக்னலில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை உரிய நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் கவனித்து காட்பாடியில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி ரயில்வே போலீசார் மோப்பநாய் சார்லஸ் உதவியுடன் ரயில் தண்டவாளத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இரு வழித்தடங்களுக்கும் இடையே மர்ம நபர்கள் இரும்பு ராடை வைத்து விட்டுச் சென்றது தெரிய வந்தது.
அதே நேரத்தில், தண்டவாளத்தின் மேற்பகுதியில் கற்களை வைத்து விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இந்நிலையில், ரயில்வே ஊழியர்களின் உதவியோடு அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சிக்னல் சரி செய்யப்பட்டது. ரயில்கள் ஏதும் செல்லும் நேரம் இல்லை என்பதால் ரயில் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில், உரிய நேரத்தில் சிக்னல் கோளாறு கண்டறியப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒரே நாளில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு.. நெல்லை மேயர் அதிரடி! - Nellai Sanitation workers salary