ETV Bharat / state

ஆவடியில் திருமண மண்பட உரிமையாளரின் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல்.. மங்கி குல்லா அணிந்த மர்மநபர் வெறிச்செயல்! - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

Avadi Murder Case: ஆவடி அருகே மண்டப உரிமையாளர் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் மண்டப உரிமையாளர் உயிரிழந்த நிலையில், சிறுமி உட்பட மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

mysterious person murder attack on avadi wedding hall owner family
ஆவடியில் திருமண மண்பட உரிமையாளர் வீட்டில் புகுந்து கொலைவெறித் தாக்குதல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 9:04 AM IST

Updated : Feb 11, 2024, 9:11 AM IST

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (65). இவர் இதே பகுதியில் சொந்தமாக VSM ROYAL என்ற திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சியாமளா (44), மகள் தீக்ஷிதா (12). இவர்களது மாமியார் ஆறுமுகம் அம்மாள் ஆகியோருடன் இவர்கள் அப்பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (பிப்.11) காலை மாதவன் வீட்டிற்கு மங்கி குல்லா அணிந்துபடி வந்த மர்ம நபர் ஒருவர், மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், சிறுமி மற்றும் பெண்கள் உட்பட அனைவருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்துள்ளது.

அப்போது குடும்பத்தினரைக் காப்பாற்ற முயன்ற மாதவனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து விடுவார்கள் என எண்ணி மர்ம நபர் வீட்டின் பின்பக்கமாகத் தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார் காயமடைந்த சிறுமி உட்பட மூவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாதவன் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

மேலும், மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் தடயங்களைக் கைப்பற்றிய போலீசார், இந்த தாக்குதலுக்கு காரணம் சொத்து பிரச்சினையா, முன்விரோதம் காரணமா, அல்லது வேறு ஏதும் காரணமா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. சார்ஜா செல்லவிருந்த பயணிகள் விமான நிலையத்தில் அவதி!

Last Updated : Feb 11, 2024, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.