ETV Bharat / state

லோன் வசூல் செய்யும் நபர் மீது மிளகாய் பொடி தூவி சரமாரி தாக்குதல்! - mysterious gang attack

Mysterious Gang Attack In Tiruvallur: தனியார் நிதி நிறுவன ஊழியரை மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை புகைப்படம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனை புகைப்படம் (credit to etv bharat tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 10:02 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார்(27). இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருடைய தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், லோன் தவணை தருவதாகக் கூறி, திருவள்ளூர் ஐசிஎம்ஆர் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

உடனடியாக அஜித்குமார் அந்த இடத்திற்கு தனியாக தனது இருசக்கர வாகனம் மூலம் சென்றுள்ளார். அங்கு வந்த அஜித் குமாரை, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி, சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அஜித்குமார் தன் வெட்டுக் காயங்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

சிறிது தொலைவில் இருசக்கர வாகனத்தை இயக்க முடியாமல் கீழே விழுந்து, தன்னைக் காப்பாற்றக் கோரி கூச்சலிட்டுள்ளார். இதைப் பார்த்த அவ்வழியாக வந்த சிலர், உயிருக்குப் போராடிய நிலையிலிருந்த அஜித்குமாரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

பின்னர், இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். வாங்கிய லோனுக்கான தவணை கட்டக்கோரி தொந்தரவு கொடுத்ததால், அவரை வரவழைத்துத் தாக்கினார்களா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடப்புத்தகம்.. ஏற்பாடுகள் தீவிரம்! - TN Textbook Distribution

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.