திருச்செந்தூர்: சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்தபோது தொலைந்து போன பை, முருகன் அருளால் மீண்டும் கிடைந்ததாக பக்தர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ளது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு காஞ்சிபுரம் திருச்சி சென்னை ஒன்று வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா பாண்டிச்சேரி போன்ற வழி மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் பேர் வந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் முதல் முதலாக சூரசம்ஹார விழாவை நேரில் காண திருச்செந்தூர் வந்துள்ளார் தொடர்ந்து அவர் கடற்கரையில் குளிக்க சென்ற போது தனது பையை கடற்கரையில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார் பையை பத்திரமாக வைத்திருக்கும் படி சுப்பிரமணியன் கொடுத்துவிட்டு சென்ற நிலையில் குளித்து விட்டு வந்து பார்த்தபோது அவர் பையை கொடுத்து வைத்திருந்த நபர்களை காணவில்லை. அவர்கள் எடுத்திருக்கலாம் என்று நினைத்த அவர், அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், நாங்கள் எதையும் எடுக்கவில்லை. பையை வைத்து விட்டு வந்தோம் என்று கூறியிருக்கின்றனர்.
எனினும் பையைக் காணமல் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடியுள்ளார் கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லாத நிலையில் தனது உடமைகளை தொலைத்து விட்டு பரிதாப நிலையில் இருந்தார். தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையிடம் சுப்பிரமணியன் உதவி கேட்டுள்ளார் பின்னர் தானே பையைத் தேடி அலைந்தபோது அதே கடற்கரையில் சில நூறு மீட்டர் தொலைவில் தனது பை கேட்பாரற்று கிடப்பதை கண்டு சுப்பிரமணியன் மகிழ்ச்சி அடைந்தார்.
மேலும் பையை திறந்து பார்த்தபோது செல்போன் ஏடிஎம் கார்டு வாட்ச் உட்பட அனைத்து பொருட்களும் திருடு போகாமல் இருந்தது.. விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து போன சுமார் அரை மணி நேரத்தில் பல்லாயிரகணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் திரும்ப கிடைத்ததை எண்ணி சுப்பிரமணியன் நெகிழ்ச்சி அடைந்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்