ETV Bharat / state

கல்வியை காவிமயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சியளிக்கிறது: விசிக எம்பி ரவிக்குமார் - vck mp ravikumar

villupuram vck mp ravikumar: கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிப்பதாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

சேகர்பாபு, ரவிக்குமார் (கோப்புப் படம்)
சேகர்பாபு, ரவிக்குமார் (கோப்புப் படம்) (credit - Sekar Babu X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 1:53 PM IST

சென்னை: கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.

எம்பி ரவிக்குமாரின் எக்ஸ் தள பதிவு; பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில், 24 ஆம் தேதி 25 ஆம் தேதி நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவற்றுள், 5 ஆவது தீர்மானமாக : “ முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி, இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்;

8 ஆவது தீர்மானமாக : “ விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்;

12 ஆவது தீர்மானமாக : “ முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.

இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது'' என இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "நாங்க நண்பர்கள்; நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம்" - ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.