ETV Bharat / state

“நானும் நாடாளுமன்றத்தில் 3 மொழிகளில் பேசுவேன்” - கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல் பேச்சு! - MR VIjayabaskar - MR VIJAYABASKAR

Former Minister M.R.Vijayabaskar: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பியாக இருந்த தம்பிதுரை, அன்று பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்ததால் தோற்கடிக்கப்பட்டார் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 3:43 PM IST

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணியில் கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, அதிமுக கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் எல்.தங்கவேலை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மார்க், மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது,"கடந்த ஐந்து ஆண்டுகளாக கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பியாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, தொகுதி மக்களைச் சந்திக்காதவர். தற்பொழுது மீண்டும் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்த உள்ளதாகக் கூறி வருகின்றனர் (தற்போது கரூர் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளார்).

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பியாக இருந்த தம்பிதுரை, அன்று பாரதிய ஜனதா கட்சியுடன் தேர்தலைச் சந்தித்ததால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாஜக எதிர்ப்பு அலை வீசியது, அதனால் தம்பிதுரை தோற்கடிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொல்லி தேர்தலைச் சந்தித்தனர்.

ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று மாணவர்களை ஏமாற்றும் வகையில் பேசி வாக்கு சேகரித்தார். ஆனால், இப்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நீட் தேர்வை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளிப்பது ஏமாற்று வேலையாகும்.

பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணியில் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த போது திமுகவினர் விமர்சனம் செய்தனர். தற்பொழுது தனியாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலை சந்திக்கத் தயாராகி உள்ளது" என்றார்.

இதனையடுத்து, அதிமுக கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தங்கவேல் பேசுகையில்,"பொதுமக்களின் கோரிக்கை குறித்து நாடளுன்மன்றத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் பேசுவேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" - எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை வீடியோ வைரல் - Edappadi K Palaniswami

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.