சென்னை: சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ராட்ஷ்ரிய ஜனதா தளம் கட்சியும் கூட்டணியாக தலா 10 தொகுதிகள் வீதம் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சி உள்ள தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி அணுகினால் போட்டியிடும் இடங்களில் மறுபரிசீலனை செய்யப்படும். இந்தியா கூட்டணி வெற்றியை பாதிக்க செய்யும் நோக்கம் கிடையாது. தேர்தலில் போட்டியிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்து விட்ட நிலையில், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்று விளக்கம் தந்தார்கள். மும்பை மாநகரம் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பாய் உள்ள பகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம்.
எல்.முருகன் அருந்ததியர் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லி தான் அருந்ததியர் சமூகத்திற்கே தெரியவந்தது. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அவர் தான் ஒரு அருந்ததியர் என காட்டி கொண்டதில்லை. அருந்ததியர் இயக்கங்களுடன் பங்கேற்றதில்லை. அருந்ததியர்களுக்காக எந்த இடத்திலும் போராடியதில்லை. குரல் கொடுத்ததில்லை. அவர் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தார். பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். தான் அவர் அருந்ததியர் என அடையாளம் காட்டியது.
அருந்ததியர் இடஒதுக்கீட்டிற்கான எந்த போராட்டத்திலும் பங்கேற்றதில்லை. குரல் கொடுத்து வாதாடியதில்லை. போராடிய இயக்கங்களுடன் நின்றதில்லை. தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியர்களுக்கும். எல்.முருகனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடக்க காலத்தில் இருந்து அருந்ததியர் சமுதாய இடஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. அருந்ததியர் இயக்கங்கள் நடத்திய போராட்டங்களிலும், மாநாடுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்று உள்ளது.
திருமாவளவன் Vs எல்.முருகன் : திருமாவளவன் பேச்சிற்கு எல்.முருகன் கொடுத்த ரியாக்ஷன்!
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 21, 2024
Read More : https://t.co/k7sMtr3i9e#thirumavalavan #lmurugan #vck #bjp #rss #chennai #etvbharattamilnadu pic.twitter.com/neoEi9R7uU
அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பாக கருணாநிதி பேசிய கட்சியே விசிக தான். இந்த கட்சியால் தான் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடே கிடைத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அருந்ததியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று பொறாமை கொண்ட சில உதிரிகள், கட்சியில் உள்ளவர்களை வெளியேற்ற தொடர்ந்து அவதூறுகளை பரப்புகின்றனர். விசிக தொடர்ந்த வழக்கு அருந்ததியர் உள் இடஒதுக்கீடு எதிர்த்து அல்ல. அவதூறு பரப்புவது அநாகரீகமான அரசியல்.
இதையும் படிங்க: “திருமாவளவன் எப்படி தலித் மக்களுக்கான தலைவராக முடியும்?” - எல்.முருகன் கேள்வி!
உள் ஒதுக்கீட்டை எதிர்த்து பேசுகிறவர்களை பற்றி விமர்சிப்பது இல்லை. அருந்ததியர்களை ஆதரித்த ஒரே தலித் அமைப்பு விசிக தான். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. சொல்லி தருகின்ற படி விசிக மீது அவதூறு பரப்புகின்றனர். அம்பேத்கர் கண்ட கனவுக்கு எதிராக இருக்கிறதால் இந்தியா முழுவதும் மாநில அரசுகள், தலித்துகளை விருப்பம் போல் கூறு போடுவது போல் இருக்கிறது. அரியானாவில் ஆட்சிக்கு வந்ததும் பாஜக அரசு செய்கிற முதல் வேலையே, சப்- கேட்கரிஷேசன் (Sub-categorization) தான்.
இதை செய்தால் எந்த காலத்திலும் தலித்கள் ஒன்று சேர முடியாத. சட்டம் வகுக்கும் போதே தலித்துகள், பழங்குடியினர் தொடர்பாக நிலைபாடு கொண்டு வர வேண்டும் என்றால் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் விவாதித்து நிறைவேற்றிய பின்னர் தான் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அம்பேத்கர் கொண்டு வந்து உள்ளார். இந்தியா முழுவதும் தலித்கள், ஆதிவாசிகள் ஒன்றுபட்டு இருந்தால் மட்டும் தான் எதிர்காலத்தில் தற்காத்துக் கொள்ள முடியும்.
இதை அடித்து நொறுக்கி தகர்க்கிற பணியை தான் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கும்பல் ஈடுபட்டு வருகிறது. தமிழ் நாட்டில் சப்- கோட்டாவை ஆதரித்தோம். ஆனால் சப்- கேட்கரிஷன் என்ற பெயரில் தனி கோட்டாவை வழிவகுப்பதை எதிர்க்கிறோம். பொருளாதார அளவு கோல்லை எதிர்க்கிறோம். விசிக தாக்கல் செய்த மனு என்பது ரிவ்யூ பெட்டிசன். தீர்ப்பை தந்த நீதிபதிகளை மறு ஆய்வு செய்ய சொல்கிறோம். தீர்ப்பை மாற்றி எழுத வாய்ப்பு இல்லை.
ஆனால் சந்தேகங்கள் களைய வேண்டும். எதிர்ப்பை பதிவு செய்ய வழக்கை தொடர்ந்தோம். அருந்ததியர்களுக்கு எதிரானது இல்லை. எல்.முருகன், ஆர்.எஸ்.எஸ். சங்கி. அவர் அருந்ததியர் அல்ல. ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை இதை விட சிறப்பாக நடைமுறைப்படுத்துவேன் என்று சீமான் கூறி உள்ளார். திராவிட அரசியல் மீது சீமானுக்கு எதிர்ப்பு உணர்ச்சி இருக்கிறது என்பதால் அந்த கருத்தை சொல்லி இருக்கிறார். திராவிடம் என்பது மரபு இனம்.
தமிழர் என்பது தேசிய இனம். மரபு இனற்றிற்குள் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் ஒன்று தமிழ் இனம். இதை வெவ்வேறாக பிரிக்க தேவையில்லை. பாரதிதாசனே திராவிடம் என்றால் தமிழ் தான். திராவிட நாடு என்றால் தமிழ் நாடு தான். திராவிடத்தை பாதுகாப்போம் என்ற தமிழை பாதுகாப்போம் என கவிதைகளில் பாடி உள்ளார்.
மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்காத காலங்களில் திராவிடம் என்று முன்னோர்கள் அறிந்து இருந்தனர். பெரியாருக்கு முன்னால் திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தியவர் அயோத்திதாசர். இதில் குழப்பிக் கொள்ள தேவை இல்லை” என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்