மயிலாடுதுறை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சி பாசறை ஒன்றிய செயலாளர் இருந்து வருபவர் உத்திரங்குடியை சேர்ந்த தீபன்ராஜ். இவருக்கும் கடலங்குடியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவனின் ஆசி பெற வேண்டும் என்பதற்காக நிச்சயிக்கப்பட்ட நாளுக்கு முன்பே, அவரது தலைமையில் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக இஸ்லாமிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட எம்பி. திருமாவளவன், கட்சியில் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களைச் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து நிச்சயிக்கப்பட்ட தீபன்ராஜ் - நந்தினி ஆகிய தம்பதியினர், தங்களுக்கு இணையேற்பு விழா நடத்த வேண்டும் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் இருவருக்கும் வரும் செப்.15ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்தநிலையில் மணமக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திருமாவளவன் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தார்.
மேலும், மணமக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். நவமி தினத்தில் திருமண சடங்கு சம்பிரதாயங்களை ஏதும் பின்பற்றாமல் அமைதியான முறையில் தொண்டர்களின் ஆரவாரத்துடன் இந்த திருமணமானது நடைபெற்றது. இதனை இரு தரப்பைச் சார்ந்த குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான திருமாவளவன்! வழக்கை ஒத்திவைத்த நீதிபதி!