ETV Bharat / state

"UPSC தேர்வுகளை ரத்து செய்வதே பிரதமரின் கொள்கை" - எம்பி சசிகாந்த் செந்தில்! - UPSC LATERAL ENTRY ISSUE

MP Sasikanth Senthil: பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தொடரில் தன்னுடைய ஆட்சிக்காலம் முடிவதற்குள் சிவில் சர்வீஸ் (UPSC) தேர்வுகளை ரத்து செய்வதே எனது கொள்கை என பகிரங்கமாக தெரிவித்தார் என்று திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

எம்பி சசிகாந்த் செந்தில்
எம்பி சசிகாந்த் செந்தில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 12:43 PM IST

திருவள்ளூர் : திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக அரசு சாதாரண அரசியல் கட்டமைப்பு மட்டுமல்ல. ஜனநாயகத்தை எல்லா விதத்திலும் தாக்கக்கூடிய ஒரு பாசிச கட்டமைப்பு கொண்ட அரசாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தொடரில் தன்னுடைய ஆட்சிக்காலம் முடியும் காலத்துக்குள் சிவில் சர்வீஸ் (UPSC) தேர்வுகளை ரத்து செய்வதே எனது கொள்கை என பகிரங்கமாக தெரிவித்தார்.

சிவில் சர்வீஸ் தேர்வு என்பது பல கட்டங்களை தாண்டி, நேர்மையான, உண்மையான மனிதாபிமானம் உள்ளவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பின்பு பொறுப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நிலைமாறி 'லேட்ரல் என்ட்ரி' என்ற சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த லேட்ரல் என்ட்ரி மூலம் இணைச் செயலாளர்கள், இயக்குனர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான லேட்ரல் என்ட்ரி அப்ளிகேஷனை யுபிஎஸ்சி கோரியுள்ளது.

எம்பி சசிகாந்த் செந்தில் (Credit - ETV Bharat Tamil Nadu)

கடந்த வருடம் இந்த லேட்ரல் என்ட்ரியில் யார் யார் வந்தார்கள் என பார்த்தால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் என எல்லாருக்கும் இந்த வாய்ப்புகளை கொடுத்து இந்தியாவை முழுமையாக அவர்கள் கன்ட்ரோலில் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.

எப்படி பட்ட அரசாங்கம், எப்படி பட்ட அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி indian bureaucracy சார்பு இல்லாமல் இயங்கக் கூடிய ஒரு இயந்திரம். இதே அழியும் போது ரொம்ப மோசமான நிலைக்கு இந்தியா மாறப் போகிறது. சமூக நீதிப்படி யார் யாருக்கு என்னென்ன கிடைக்கனுமோ அந்த ரிசர்வேசன்ஸ் பின்பற்ற போவதில்லை.அதனால் முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளாக தங்களது அடியாட்களையும், கை பொம்மைகளையும் இந்த பொறுப்பில் வைக்கப் போகிறார்கள். இது மிகவும் பாதிப்பான விஷயம். இதை நாம் சாதாரண விஷயமாக பார்க்கக்கூடாது.

நாளைக்கு நடக்கப் போகிற தேர்வுகளிலிருந்து ஆரம்பித்து எதிர்கால மாணவர்களின் வாழ்க்கை, நமக்கு கிடைக்க போகிற வேலைகள் என எல்லாமே மாறப்போகிறது. அதனால் இதை நாங்கள் காங்கிரஸ் சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து - முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு! - upsc lateral entry plan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.