ETV Bharat / state

“வன்மத்தை வைத்து அரசியல் வளர்க்கக் கூடாது” - எம்பி துரை வைகோ பேச்சு! - MP Durai Vaiko

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 6:44 PM IST

Durai Vaiko: ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திருமாவளவன் இருக்கிறார். தலித் இளைஞர்களை அவர் பக்குவப்படுத்துகிறார். வன்மத்தை வைத்து அரசியல் வளர்க்கக்கூடாது. சமுதாய முன்னேற்றத்தை வைத்து அரசியல் வளர்க்க வேண்டும் என்று எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

எம்.பி.துரை வைகோ
எம்.பி.துரை வைகோ (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக் கோரி, அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வசீகரன் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடர்ந்து 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வசீகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எம்பி துரை வைகோ பேசியதாவது, “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனநாயகத்திற்கு விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் முதலில் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் பெயில் கொடுக்கும் என்று தெரிந்தும், சிபிஐ மூலம் மறுபடியும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை சட்டவிரோதப் போக்கில் முடக்கி விடலாம் என்று மோடி ஆட்சி நினைக்கிறது. கருணாநிதியின் பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு தான் வெளியிட முடியும். தனிப்பட்ட முறையில் வெளியிட முடியாது. இதில் நான் அரசியல் பார்க்கவில்லை” என்றார்.

தொடர்ந்து, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வரும் சூழல் தமிழகத்தில் இல்லை என்ற திருமாவளவனின் கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழகத்தில் மக்களிடையே சாதிய வன்மம் இருக்கிறது. சாதிய பாகுபாடு இருக்கும்போது தலித்தை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வார்களா? என்று அண்ணா திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், காலம் மாறும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திருமாவளவன் இருக்கிறார். தலித் இளைஞர்களை அவர் பக்குவப்படுத்துகிறார். வன்மத்தை வைத்து அரசியல் வளர்க்கக்கூடாது. சமுதாய முன்னேற்றத்தை வைத்து அரசியல் வளர்க்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “சமஸ்கிருதம் செத்துப்போன மொழி..” அமைச்சர் துரைமுருகன் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.