தஞ்சாவூர் : மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,039வது சதய விழா கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று (நவ.10) தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 1,039 பேர் இணைந்து சிறப்பு நடனம் ஆடினர்.
பெரிய கோயில் வளாகத்தில் பள்ளி மாணவர்கள் ராஜராஜ சோழன் போல் வேடமணிந்து மயிலாட்டம், பரதம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு நாட்டிய அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க : “ராஜராஜ சோழனின் சிலை வெளியே உள்ளது வேதனை அளிக்கிறது” - கவிஞர் வைரமுத்து!
இதைப்போல் கர்நாடக கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெற்றவரும், இசையமைப்பாளர் அனிருத் அவர்களுடன் இணைந்து பாடிய கங்கா சசிதரன் குழுவினரின் சிறப்பு வயலின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்