ETV Bharat / state

திராவிட மாடல் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தயங்குவது ஏன்? - எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்தி கேள்வி! - TN ASSEMBLY SESSION 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 3:29 PM IST

TN ASSEMBLY SESSION 2024: நடப்பு கூட்டத்தொடர் முடியும்வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடாது என்ற பாநாயகரின் உத்தரவு நியாயமானது இல்லை எனவும், மக்களை காக்க, கள்ளச்சாராயத்தை ஒழிக்க, கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி
எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி (Image Credit - ETV Bharat Tamilnadu)

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அதிமுகவினர்கேட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 60 உயிர்களை பலி கொடுத்த இந்த விவகாரம் தொடர்பாக பேச கேட்டதற்கு அவை தலைவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்த காரணத்தால் அவை தலைவர் காவலர்களை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டார்.

மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதை ஒடுக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர், அவை தலைவர் ஒருதலைபட்சமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டத்தொடரில் ஏற்கெனவே நான் பேசும்போது சொல்லி இருக்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவர்கள் மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என மழுப்புகிறார்கள். இங்கு, சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் அரசு ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தயங்குகிறார்கள்; மறுக்கிறார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி.

மக்கள் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால் வெளியே அனுப்பி விடுகிறார்கள். பொது வெளியில் மக்கள் மன்றத்தில் பேசினாலும் ஒடுக்கிறார்கள். புரட்சி பாரதம் கட்சி சார்பில், நேற்று கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த 60 உயிர்களுக்கு என்ன தீர்வு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அப்படி இல்லையென்றால் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்" என்று பூவை ஜெகன் மூர்த்தி கூறினார்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு; ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் முதல்வர் பேசியது என்ன? - tn assembly session 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.