ETV Bharat / state

திருச்சியில் விரைவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு:எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உறுதி! - MLA Inigo Irudayaraj petition - MLA INIGO IRUDAYARAJ PETITION

MLA Inigo Irudayaraj on trichy shivaji statue issue: நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை நிறுவுவதற்கான சரியான மாற்று இடத்தை விரைவில் தேர்வு செய்யுமாறு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சிவாஜி கணேசன் சிலை மற்றும் இனிகோ இருதயராஜ் புகைப்படம்
சிவாஜி கணேசன் சிலை மற்றும் இனிகோ இருதயராஜ் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 9:28 PM IST

இனிகோ இருதயராஜ் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சிவாஜி கணேசன் சிலை இன்னும் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலை, சிலையை நிறுவுவதற்கான மாற்று இடம் குறித்து கேட்டறிய, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிலையை நிறுவ சரியான இடத்தை தேர்வு செய்யுமாறு திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (மே 20) மனு அளித்துள்ளனர்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 2011 ம் ஆண்டு 9 அடி உயர சிலை நிறுவப்பட்டது.

ஆனால் நிறுவப்பட்ட சிலை அதே இடத்தில் 13 ஆண்டுகளாக சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இதற்கிடையே, சிலையை திறக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த மோகன் பாலாஜி என்ற ரசிகர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது எனக் கூறியது.

மேலும் மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கிய சந்திப்பில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று, குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சியில் எந்த இடத்தில் சிலை வைக்கலாம் என்பது குறித்து கேட்டறிய, நீதிமன்றம் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தற்போது உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ், திருச்சி கலை, கோவிந்தராஜன் ஆகியோர் இன்று பாலக்கரையில் மூடப்பட்டிருக்கும் சிவாஜி சிலையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இனிகோ இருதயராஜ், “திருச்சியில் எந்த இடத்தில் சிலை வைக்கலாம் என்பது குறித்து கேட்டறிய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது. எனவே சரியான இடத்தை தேர்வு செய்யுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு அளிக்க உள்ளோம்.

மிகப்பெரிய மாநகரில் சிலை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. இது குறித்து ஏற்கனவே தமிழக அரசிடமும் சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். தமிழக முதல்வரும் சிவாஜி ரசிகர் தான் எனவே அவர் சரியான முற்றுப் புள்ளி வைப்பார்”, என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சசிகலா, ஓபிஎஸ் விவகாரத்தில் ஈபிஎஸ் உடன் கருத்து வேறுபாடா? - எஸ்.பி வேலுமணி விளக்கம்! - SP Velumani

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.