ETV Bharat / state

“மீனவர்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக மாறியுள்ளது”- ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்! - Stalin Letter for Fishermen arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர் கைது செய்வதால் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கை நிச்சயமற்றதாக மாறியுள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எழுதப்பட்ட கடிதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எழுதப்பட்ட கடிதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து, அவர்களது படகுகளை பறிமுதல் செய்து வைத்துக்கொள்ளும் நிகழ்வு தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.29) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், “இராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து IND-TN-10-MM-411 மற்றும் IND-TN-10-MM-544 பதிவு எண்களைக் கொண்ட இரண்டு படகுகளில் 28.09.2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில், இன்று (29.09.2024) நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரம் அடைய செய்வதோடு அவர்களது வாழ்வை நிச்சயமற்றதாக மாற்றுகிறது.

இதையும் படிங்க: “இனி எந்நாளும் தமிழ்நாட்டை திமுக தான் ஆள வேண்டும்”- முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை!

இந்த சிக்கலான பிரச்சினையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம். இந்நிலையில் சூழல் நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு 27.09.2024 அன்று இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளையும் ஒன்றாக இந்தக் கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளோம்.

எனவே, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.