ETV Bharat / state

40க்கு 40.. வெற்றி வாகை சூடிய வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து! - MK Stalin Met 40 candidates - MK STALIN MET 40 CANDIDATES

MK Stalin: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று நேரில் வாழ்த்து பெற்றனர்.

MK Stalin
முக ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 9:56 PM IST

சென்னை: நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலாக கூட்டணி கட்சிகள் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதன்படி, வெற்றி வேட்பாளர்கள் வாழ்த்து பெற திமுக தலைமை அலுவலகமான, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர். முன்னதாக, அண்ணா அறிவாலயம் செல்லும் வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், க.செல்வம், கதிர் ஆனந்த், ஆ.மணி, சி.என்.அண்ணாதுரை, தரணிவேந்தன், மலையரசன், டி.எம்.செல்வகணபதி, பிரகாஷ், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, அருண் நேரு, முரசொலி, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, சுதா, கோபிநாத், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், சசிகாந்த் செந்தில், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் ஆகியோரும் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.

மேலும், மதிமுகவின் துரை வைகோ, ஐயூஎம்எல் கட்சியின் நவாஸ் கனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் மற்றும் வை.செல்வராஜ் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வசீகரன் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: "நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம்" - மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.