ETV Bharat / state

ஜூன் 1ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்.. 'இந்தியா கூட்டணி' புதிய வியூகம்! - Mk Stalin Delhi visit - MK STALIN DELHI VISIT

Mk Stalin Delhi visit: ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் (Credits - MK Stalin X Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 11:25 AM IST

சென்னை: ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தலுக்கான ஆறு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஒன்றாம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் 28 கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்ட விதம், தேர்தல் முடிவுக்கு பிறகு ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டணியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக ஜூன் 1-ஆம் தேதி காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகப் பகுதிகளைக் கேரள அரசு தரப்பில் அளவீடு..? விளக்கம் அளிக்க வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.