ETV Bharat / state

சிந்தப்பள்ளி பட்டாசு ஆலை விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து

Sattur firecracker accident: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 6:59 PM IST

சென்னை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி என்ற கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அஜித்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சிந்தப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், நேற்று (24-02-2024) பிற்பகல் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அருணாச்சலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மன் கி பாத் நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு கிடையாது - மோடி சொன்ன காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.