ETV Bharat / state

செஞ்சி ஆட்டோ விபத்து: உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - gingee auto accident

MK Stalin: செஞ்சி அருகே விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து இரு சிறுவர்கள் பலியானதில் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிவராண நிதி அறிவித்துள்ளார்.

MK Stalin
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 6:52 AM IST

விழுப்புரம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஞ்சி அருகே விவசாய கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவராண நிதியாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதில், "விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கப்பை கிராமம் அருகே நேற்று(பிப்.24) அதிகாலை சிராஜ் என்பவர் தன் உறவினர்கள் 9 பேருடன், தனது சொந்த ஆட்டோவில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு சென்றுவிட்டு விழுப்புரம் உறவினர் வீட்டிற்கு திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைத் தடுமாறி சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி அருகிலிருந்த விவசாய கிணற்றில் விழுந்தது.

இதில், ஆட்டோவில் பயணம் செய்த சிராஜ் அவர்களின் இரு மகன்களான பிரகதீஸ்வரன் (9), ஹரி பிரசாந்த் (8) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

மேற்கண்ட விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனமழையால் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கு ரூ.201.6 கோடி நிவாரணம் - அரசாணை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.